மஹிந்தவின் ஆட்டம் ஆரம்பம்- ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அதிரடி கைது

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி ஏற்ற போதும் அவர் இன்னமும் பாராளுமன்ற பெரும்பான்மையை நிரூபணம் செய்யவில்லை.

தனக்கு ஆதரவு தரக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கு இன்னமும் பெரும்பான்மை ஆதரவுக்குரிய 113 உறுப்பினர்கள் என்னும் எண்ணிக்கையை அடையமுடியவில்லை.

இதன் காரணமாக ரணில் பக்கம் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கையை இப்போது முடுக்கிவிட்டுள்ளார்.

சற்றுமுன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹெஷன் விதானகே மற்றும் பாலித தேவரப்பெரும ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுந்திர கூட்டமைப்பை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மேயர் அஜித் பிரசன்னாவை தாக்கியதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்படுவார்களா அல்லது எதிர்வரும் 14 வரை இவர்களின் விடுதலை இழுத்தடிக்கப்படுமா என்னும் பரபரப்பு எழுந்த்துள்ளது.

அவ்வாறு இருவரின் விடுதலை தள்ளிப்போகும் பட்சத்தில் ரணிலுக்கு பாரிய சிக்கல் நிலை எழும் வாய்ப்புகள் உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]