மஹிந்தவிடம் வாக்குமூலம் பதிவு

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டத்தாபனத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பியதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.

கடந்த 16 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு சமூகமளிக்குமாறு அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அங்கு சமூகமளிக்கவில்லை.
இந்நிலையிலேயே இன்று வாக்குமூலமளிப்பதாக ஆஜராகியிருந்தார்.

சுமார் ஒரு மணித்தியாளயம் இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தவின் சார்பாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தில் தேர்தல் பிரசார விளம்பரங்கள் ஒளிபரப்புச் செய்யப்பட்டன. அதற்கான கட்டணங்கள் இதுவரை செலுத்தப்படவில்லை என்றே இவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]