முகப்பு News Local News மஹிந்தவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணை

மஹிந்தவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறுவர் அடங்கிய குழுவினர் விசாரணைக்காக விரைந்துள்ளனர்.

இந்நிலையில், தனிப்பட்ட அலுவல்களின் நிமித்தம் வெளியில் சென்றிருந்த அவர், 11.30 அளவில் தனது இல்லத்துக்கு வருகைத் தந்ததாகவும், தற்போது அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு சென்றுள்ளதாகவும் தவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com