மஹா படத்தின் சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா!

வெளிப்படுத்தும் திறமைகளைத் தவிர, நடிகர்கள் எப்போதும் தங்கள் தொழிலில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். இது அவர்களுக்குள் இயல்பாகவே இருக்கின்ற ஒரு குணம். குறிப்பாக நடிகைகள் தங்களின் பரபரப்பான சூழலிலும் கடுமையான உழைப்பை தருவதோடு, வேறு வேறு காட்சிகளிலும் எந்த வித்தியாசமும் இல்லாமல் நடிக்கிறார்கள். பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில், மொத்த கதையும் நாயகியை சுற்றியே நடக்கும், அதற்கேற்ற மிகச்சிறப்பான நடிப்பால் ஒட்டுமொத்த குழுவையும் கட்டிப்போட வேண்டும். அந்த வகையில் நடிகை ஹன்சிகா நடித்து வரும் மஹா படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சிக்கு கடுமையான உழைப்பை கோரியது,  திங்களன்று அந்த காட்சி படமாக்கப்பட்டது.

இந்த சண்டைக்காட்சியில் நடிகை ஹன்சிகா தரையில் குட்டிக் கரணம் அடிக்க வேண்டும். ஒரு சிறு கால இடைவெளியில் அது தவறாக அமைந்து, சிறிய காயத்தில் முடிந்தது. விரைவான முதல் உதவி மற்றும் குழுவின் ஆதரவு ஹன்சிகாவை அந்த சம்பவத்தில் இருந்து மிக விரைவில் மீட்டது. திரும்ப திரும்ப சொல்லப்பட்ட ஆலோசனைக்கு  பின்னரும் கூட, ஹன்சிகா எந்தவொரு கையசைவும் இன்றி அந்த காட்சியில் நடித்தார்.

“மஹா” ஒரு தனித்தன்மை வாய்ந்த படம். இது நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது படம், இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25வது திரைப்படமாகும். நாயகியை மையப்படுத்திய கதையில் முதன்முறையாக ஹன்சிகா நடிக்கும் இந்த ‘மஹா’வை யூ ஆர் ஜமீல் இயக்குகிறார். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி மதியழகன் தயாரித்திருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]