மஹத்தை கன்னத்தில் அறையும் நடிகர் சிம்பு – வீடியோ உள்ளே

பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்ற வாரம் மக்களால் வெளியேற்றப்பட்ட நடிகர் மஹத்தை, சிம்பு கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 16 பேர் போட்டியாளராக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடைசி வரை நிகழ்ச்சியில் தாக்குப்பிடிப்பவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். கடந்த வாரம் நடிகர் மஹத் ‘பிக்பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேறினார்.

மஹத் மிகக் கடுமையாக நடந்து கொண்டதாகவும், கெட்ட வார்த்தை அதிகம் பயன்படுத்துவதாகவும் சக போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். அதேசமயம் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா மட்டும் மஹத்திற்கு ஆதரவாக இருந்தனர். மஹத் வெளியேறியபோது நடிகர் சிம்புவிற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். சிம்புவால் தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் ‘பிக்பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேறிய மஹத்தை நடிகர் சிம்பு கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவில் மஹத்தை நடிகர் சிம்பு மூன்று முறை கன்னத்தில் அறைகிறார். மூன்றாவது முறை சற்று வேகமாகவே அறைகிறார். அந்த நேரம் மற்றொரு நபர் மஹத்தின் இரண்டு கைகளையும் பிடித்து வைத்துள்ளார்.

பின்னர் ‘எவ்ளோ அடிச்சாலும் உனக்கு வலிக்காது. ஏனென்றால் அவ்வளவு அடி நீ உள்ளுக்குள்ள வாங்கியிருக்க’ என மஹத்தை பார்த்து சிம்பு கூறுகிறார். பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]