மஸ்கெலியா பாதச்சுவடுகள் தொடர்பில் ஆய்வு

மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகளை, அங்கு விஜயம் செய்துள்ள கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் அதிகாரிகள் குழு, இன்று ஆய்வு செய்தது.

அந்த பாதச்சுவடுகளை புகைப்படம் எடுத்ததுடன் அகலம், உயரம், நீளம் போன்றவற்றை அவர்கள் அளவீடு செய்தனர்.

இந்த பாதச்சுவடுகள் குறித்து உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும், கண்டிக்கு சென்று மேலும் இது தொடர்பாக ஆராய்ந்த பின் முழுமையான அறிக்கையொன்றை பெற்றுத்தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த பாதசுவடுகள் அனுமானின் பாதங்கள் என தெரிவித்து, பிரதேச மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.