‘மஸ்கெலியா’வில் மர்ம காலடி சுவடு

மஸ்கெலியா

மஸ்கெலியா வட்மோர் தோட்டக் காட்டு பகுதியில் வலது காலடி சுவடு ஒன்று கண்டு பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

வட்மோர் தோட்ட பொதுமக்களால் இந்த வலதுகாலடி சுவடி இன்று இனங்காணப்பட்டதையடுத்து, அதுகுறித்து மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டுள்ளது.

வலது காலடி சுவடு யாருடையது என்பதை கண்டுபிடிக்க மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், வட்மோர் தோட்டமக்கள் குறித்த வலது காலடி சுவட்டுக்கு மஞ்சள் பூசி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]