முகப்பு News India மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளா பகுதிகளில் எலிக்காய்ச்சல் : 12 பேர் பலி

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளா பகுதிகளில் எலிக்காய்ச்சல் : 12 பேர் பலி

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளா பகுதிகளில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகின்ற நிலையில் 12 பேர் பலியாகி உள்ளனர்.

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளத்தில் இயல்புநிலை திரும்பத் தொடங்கி உள்ள நிலையில், சுகாதார அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்படத் தொடங்கி உள்ளதோடு, எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது.

இந்த காய்ச்சலில் இதுவரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் கனமழை பெய்த நிலையில், இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மேலும் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்ததோடு, மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், 483 பேர் உயிரிழந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com