இன்று முதல் மழை அதிகரிக்கலாம்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று முதல் மழை அதிகரிக்கலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தென்மேற்கு பகுதிகளிலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைவீழ்ச்சி அதிகரிக்கும் நேரத்தில் காற்றின்வேகம் சற்று அதிகரிப்பதாகவும், இடியுடன் கூடிய காலநிலையும் நிலவும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.