மழையுடன் கூடிய காலநிலை

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வறட்சி காலநிலை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் மழை காலநிலை நாளை முதல் குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

வடக்கு வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தூறலான மழை காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய காலநிலை நண்பகல் 2.00 மணியின் பின்னர் காணப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் சில இடங்களில் காலைவேளைகளில் மேற்கு கடற்கரையோரங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காற்று, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.