முகப்பு News Local News மழையுடனான காலநிலை அதிகரிக்கும் – காலநிலை அவதான நிலையம்

மழையுடனான காலநிலை அதிகரிக்கும் – காலநிலை அவதான நிலையம்

நாளை மறுதினம் முதல் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிவித்துள்ளது.

இதனுடன் மத்திய, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த தினங்களில் நிலவிய அதிக மழையுடனான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 87 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் வளத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தனியார் நிறுவனங்களிடம் கொள்வனவு செய்யப்படும் மின்சாரம் 1 சதவீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com