எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் நாட்டில் மழையுடனான காலநிலையில் அதிகரிப்பு ஏற்படலாம் என, வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் மற்றும் ஊவா மாகாணங்களுடன், இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் கூறியுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]