மல்லியப்பு சந்தியில் ஆர்ப்பாட்டம்

மல்லியப்பு சந்தி

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன் முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் நகரில் பொது மக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் மல்லியப்பு சுற்றுவட்டத்திற்கு முன்பாக இன்று மதியம் 12.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பதாதைகளை ஏந்தி, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியாறு சுமார் ஒரு மணித்தியாலம் பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊவா மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைவிடம் வலியுறுத்தும் வகையில் இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, வீதியை மறித்து போராட்டத்தை நடத்துவதற்கும், ஊர்வலம் செய்வதற்கும் எதிராக ஹட்டன் நீதிமன்றத்தின் தடையுத்தரவை ஹட்டன் பொலிஸார் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]