மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக பகுதிகளில் பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

பதுளை – கொழும்பு பிரதான ரயில் போக்குவரத்து பாதையில் தலவாக்கலை ரயில் நிலையத்தின் சுரங்கப்பகுதிக்கு அருகாமையில், 115ஆவது மைல் பகுதியில் ரயில் போக்குவரத்து நேற்றிரவு பாதிக்கப்பட்டது.

மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு நேர தபால் ரயில், தலவாக்கலை ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் தரித்து வைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 2.00 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையகத்திற்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]