மலையக மக்கள் முன்னணியின் அரசியல், தொழிற்சங்க கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு இராதா பணிப்புரை : 26இல் மகளிர் அணியின் மாநாடு

மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றை அரசியல் தொழிற்சங்க கட்மைப்பு ரீதியில் பலப்படுத்துவதற்கு அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணி, இளைஞர் அணி, ஆசிரியர் முன்னணி ஆகியவற்றின் மாநாடுகளை இன்னும் சில மாதங்களுக்குள் நடத்தி முடிக்குமாறு கட்சியின் தலைவரான கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி மகளிர் அணியின் மாநாடு எதிர்வரும் 26 ஆம் திகதியும், இளைஞர் அணி மாநாடு ஏப்ரல் மாதத்திலும் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று செயலாளர் அ.லோரன்ஸ் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் புதிய நிருவாகிகளை, அலுவலக உத்தியோகத்தர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந் நிகழ்வில், முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன், அரசியற்துறை தலைவரும், இணைத்தலைவரும், பதுளை மாவட்ட எம்.பியுமான அ. அரவிந்த குமார் , நிதிச்செயலாளர் எஸ். விஸ்வநாதன், தேசிய அமைப்பாளர் ஆர். ராஜாராம் , பிரதி செயலாளர் நாயகம் அனுஷா உட்பட மேலும் சில உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போதே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கட்சியின் உயர்பீடம், மத்திய செயற்குழு, தேசியச் சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள் கூட்டங்களுக்கு தவறாது சமூகமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தோட்டத்தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள், அலுவலகப் பொறுப்பாளர்களின் பணிகள் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]