மலையக மக்களை கீழ்தரமாக பேசிய நபர் சிக்கலில்!!? (video)

கடந்த ஒரு வாரமாக மலையக மக்களை மிகவும் இழிவாக பேசி வரும் ஜேர்மன் நபர் தொடர்பான பதிவுளும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வரும் நிலையில் தற்போது குறித்த ஜேர்மன் நபர் தொடர்பில் நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை கல்வி ராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் செய்துள்ளார்.

ஜெர்மனி நாட்டிலிருந்து மலையக மக்களை இழிவுப்படுத்திய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரியே இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

மலையக மக்களை

இவ்வாறான தீயசக்திகள் மலையக மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதான பரப்புரைகளை செய்வதன் பின்புலம் பற்றி மிக அவதானமாக செயல்பட வேண்டிய தருணமிது.

உண்மைக்குப் புறம்பான அநாகரிகமான கருத்துக்களை பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க இ.தொ.கா ஆராய்ந்து வருகின்றது.200 வருட வரலாற்றினைக் கொண்ட ஒரு சமூகத்தின் மீது அபாண்டமான எண்ணக்கருக்களை ஏற்றம் செய்வதன் மூலம் இந்த சமூக குரோத, விரோத சக்திகள் தமது எதிர்பார்ப்புகளை அடைவதை இ.தொ.கா ஒருபோதும் அனுமதிக்காது.

 

நேற்று மாலை இது தொடர்பில் இ.தொ.கா நிர்வாக உப தலைவரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து தலைமையில் உப தலைவர்களான திரு.கருப்பையா கணேசமூர்த்திஇ திரு.எஸ்.ரவீந்திரன், திரு.செல்லசாமி திருக்கேதீஸ்வரன், இளைஞர் அணி சார்பில் திரு.பி.சசிகுமார் திரு.எம்.ராஜாராம் ஆகியோர் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் புகார் செய்துள்ளனர் என ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]