மலையக மக்களுக்கு உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டமூலம் சாதகமாக இல்லாவிடின் எதிர்ப்போம் : இராதா

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தொடர்பாக 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில சமர்பிக்கவிருக்கும் சட்டம் மலைய மக்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் அதற்கான எதிர்பை உரிய இடங்களில் தெரிவிக்க உள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களுக்கு

மலையக மக்கள் முன்னனியின் மத்திய குழு கூட்டம் நுவரெலியா பிரதேச செயலகத்தில் கல்வி இராஜாங்க அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போதே மேற்படி தீர்மாமம் எடுக்கபட்டதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

புதிய முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் திருத்ததின் ஊடாக மலையக மக்களுக்கான பிரதிநித்துவம் பாதிக்காமல் இருக்க வேண்டும். புதிய தேர்தல் முறை மலையக மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே காணப்படுகின்றது.

வட்டாரங்கள் பிரிக்கும் போது சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்ககூடாது. இந்தப் பிரச்சனைக்கு ஒரு திர்வை பெற வேண்டுமானால் சிறுபாண்மை கட்சிகளான மலைய கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் உட்பட ஏனைய சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]