மலையக மக்களின் தன்னாட்சி அதிகாரத்தை வென்றெடுக்க தொழிற்சங்கங்கள் ஒன்றிணைய வேண்டும் : தம்பையா

மலையகத் தமிழர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் தன்னாட்சி மற்றும் சுயநிர்ணயம் உறுதிச்செய்யப்பட வேண்டும் என்று மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான கலாநிதி இ.தம்பையா தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிலாளர் வர்க்கம் என்ற அடிப்படையிலும், மலையகத் தமிழர் என்ற தேசிய இனம் என்ற அடிப்படையில் இனரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். இந்த ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை அடைய நேர்மையான பலமான புதிய சிந்தனைகளையும், அணுகுமுறைகளையும் கொண்ட தொழிற்சங்க இயக்கமும், தேர்தல் அரசியலுக்கு அப்பாலான வெகுஜன அரசியல் இயக்கமும் பலமாக கட்டப்பட வேண்டும். இந்த அடிப்படையில் நேர்மையான மலையக அமைப்புகள் அனைத்தும் பொது இணக்கப்பாட்டுடன் இயங்க முன்வரை வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களினதும் மலையக தமிழ் மக்களினதும் நீண்டகால உரிமை கோரிக்கைகளையும், நாளாந்த உரிமை கோரிக்கைகளையும் வென்றெடுக்கவும், நாட்டின் ஏனைய துறைசார் தொழிலாளர்களினதும், விவசாயிகளினதும் ஒத்துழைப்பையும் சர்வதேச ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதும் அவசியம்.

மலையக தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமான அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் அரசியல் தன்னாட்சியதிகாரம், சுயநிர்ணயம், சுயாட்சி, சமத்துவம் என்ற அடிப்படையில் உறுதி செய்யப்படல் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]