மலையக பாடசாலைகளுக்கு இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்துவருவதை கல்வி அமைச்சு கைவிடவேண்டும் : மஹிந்த ஆதரவு

மலையக பாடசாலைகளுக்கு இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்துவருவதை கல்வி அமைச்சு கைவிடவேண்டும் என்று மஹிந்த அணி எம்.பியான கனக ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

‘ தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு இந்தியாவிலிருந்து 100 ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவர் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். இது தோட்டப்பகுதியிலுள்ள கல்விகற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

தோட்டப்பகுதியிலுள்ள பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளலாம். அப்படி இல்லாவிட்டால் உயர்தரம் கற்றவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கலாம்.

இந்திய ஆசிரியர்களை அழைத்துவந்தால் அவர்களுக்கு தங்குமிட வசதி வழங்கவேண்டும். இதனால் செலவுகள் அதிகரிக்கும். சிலவேளை, கைச்சாத்திடப்படவுள்ள எட்கா உடன்படிக்கையின் ஓரங்கமாகவா இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுகின்றது. எனவே, இந்தப் பிரச்சினையை உள்நாட்டில் தீர்த்துக்கொள்ளலாம்’ என்றார் கனக ஹேரத்.

இதன்பின்னர் பதிலளித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,

தோட்டப்பகுதியிலுள்ளவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக ஆட்சேர்ப்பு செய்தோம். ஆனாலும், ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் தீரவில்லை.இது பற்றி கனவம் செலுத்தியுள்ளோம்.

அத்துடன், வேறு பகுதிகளிலிருந்து அங்குசென்று பணியாற்றுவதற்கு சிலர் விரும்புவதில்லை. இதுவும் பிரச்சினையாக இருக்கின்றது. இந்நிலையில்தான், இந்தியாவிலிருந்து வரவழைப்பது பற்றி இராஜாங்க அமைச்சால் கவனம் செலுத்தப்பட்டது.

இதனால் நன்கொடை அடிப்படையிலேயே குறித்தசேவை, அதுவும் குறிப்பிட்ட காலத்துக்கு பெற்றுக்கொள்ளப்படும். நாட்டில்
16 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது’ என்றார்.

விஞ்ஞான பிரிவுக்கு தோட்டப்பகுதிகளில் குறைவு. பயிற்சி வழங்கி எமது நாட்டுப் பணம் அல்ல. நண்கொடை. ஆல்லது குறிப்பட்ட காலத்துக்கு. எதிர்பார்க்கின்றோம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]