மலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இந்தியா உதவி

மலைய பாடசாலைகளுக்கு பல்வேறு உதவிகளை இந்திய அரசு செய்துவருகின்றது அதன் ஒரு கட்டமாக புஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு ரூ.95 மில்லியன் நிதி உதவி வழங்கவுள்ளது. மேலும் மலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இந்திய உதவ உள்ளதாக கண்டி உதவி இந்திய தூதரகம் அறியத்தந்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கண்டி தமிழ் வர்த்தக சங்க ஏற்பாட்டில் கண்டி அவன்னல மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கல்வி பொது சாதாணதர பரீட்சையில் தமிழ்மொழி மூலம் ஐந்து ஏ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்ற 93 மாணவர்கனையும், 100 சதவிதம் பரீட்சையில் பெறுபேறுகளை பெற காரணமாக இருந்த 165 ஆசிரியர்களையும், அதிபர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மலையகத்தில் 15

இந்நிகழ்வில் மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க கண்டி உதவி இந்திய ஸ்தானிகர் செல்வி இராதாவெங்கட்ராமன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாணசபை முதல்வர் துறை மதியுகராஜா, மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.சதீஸ் உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

இந்தியா மலையக அபிவிருத்திக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது. நான் கல்வி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்ற உடன் இந்தியாவின் உதவியுடன் மலையத்தில் 30 பாடசாலைகளை அபிவிருத்திச் செய்ய கோரிக்கை விடுத்தேன். அதில் தற்போது முதற்கட்டமாக 15 பாடசாலைகளை அபிவிருத்திச் செய்ய உள்ளதாக கண்டி உதவி இந்திய ஸ்தானிகர் செல்வி இராதா வெங்கட்ராமன் என்னிடம் கூறினார். அந்தவகையில் இவருக்கும் இந்திய அரசிற்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாங்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அதனால் இந்தியா எங்களுக்கு உதவி செய்வதற்கும் நாங்கள் உதவிகளை கேற்பதற்தும் கடமைப்பட்டுள்ளோம். தற்போது இந்தியா மலையக மக்களின் அவிவிருத்திகாக கலை, கலாச்சரா, பண்பாடு, பொருளாதார, கல்வி, வீடமைப்பு, சுகாதார ரீதியில் பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]