மலையகத்தில் நோயாளர்கள் அசௌகரியம்

நோயாளர்கள்

மலையகத்தில் நோயாளர்கள் அசௌகரியம்

இன்று காலை 8 மணி முதல் ஒருநாள் அடையாளப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை வைத்தியர்கள் முன்னெடுத்த நிலையில், மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் நேற்று வைத்தியசாலைகள் செயழிழந்து காணப்பட்டன.

இதன்காரணமாக, ஹட்டன் – டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர்.

வெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தனர்.

எனினும் நோயளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பதுளை மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பினால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]