மலையகத்தில் காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம்

மலையகப் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் வேளைகளில் கடுமையான வெப்பம் நிலவி வருவதுடன் காலை வேளையில் அதிகளவு குளிர் நிலவுகிறது.

மாலையில் 5 மணியளவில் குளிர் காலநிலை நிலவுவதுடன், இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.

அத்துடன், நீர்த்தேக்கங்களிக் நீர்மட்டம் தற்போது குறைய தொடங்கியுள்ள நிலையில், இவ் வெப்பநிலை தொடருமாயின் மேலும் நீர்மட்டம் குறையுமென லக்ஸபான நீர் மின்சார நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன், இந்த காலநிலை காரணமாக தேயிலைச் செடிகளில் கொழுந்துகள் இல்லை என்பதால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]