மலையகத்தில் எமது அபிவிருத்தித் திட்டங்களுக்கே அடிக்கல் நாட்டப்படுகிறது : ஆறுமுகன் தொண்டமான்

மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கொண்டுவந்த அபிவிருத்திக்கே அனைவரும் அடிக்கல் நாட்டிவருவதாக இ.தொ.காவின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான தெரிவித்துள்ளார்.

தோட்ட சேவையாளர் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த கூட்டமொன்று கொட்டகலை தொண்டமான் தொழிநுட்ப பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்திடம் 23 தடவைகள் பேசிதான் 4, 000 வீடுகள் பெற்றுக்கொண்டோம். அதற்கு இன்று ஏனையவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்கள். எனவே, மலையகத்தில் மேற்கொண்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கை காங்கிரஸால் கொண்டுவரப்பட்டவையாகும்.

கடந்த காலங்களில் எமது மக்கள் ஒற்றுமையாக இருந்து செயப்பட்டதன் மூலம்தான் எங்களுக்கு பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ள முடிந்தது. சகலவற்றினையும் தீர்மானிப்பது உங்கள் சத்தி. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் உங்களுக்குத் தேவையான அத்தனையும் பெற முடியும்.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ், முன்னாள் கல்வி அமைச்சர் அனுசா சிவராஜா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மலையகத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]