மலையகத்தின் பல பகுதிகளில் சுழல்காற்று

மலையகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமை காரணமாக வீடுகளின் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

தலவாக்கலை – கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா, ஸ்கல்பா, மலைத்தோட்டம் ஆகிய பிரிவுகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 50ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் சில சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட 50ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 150ற்கும் மேற்பட்டோர் தோட்டத்திலுள்ள அவர்களின் உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன் நகரில் ஏற்பட்ட சுழற்காற்றினால் 6 வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவுக்கும் காற்று காரணமாக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.