மலைப்பாம்பை அசால்ட்டாக தோளில் போட்டுக்கொண்ட காஜல்- வீடியோ உள்ளே

நடிகை காஜல் அகர்வாலுக்கு தற்போது தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற படம் மட்டுமே உள்ளது.

இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நடித்து முடித்துவிட்ட காஜல் தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார்.

அங்குள்ள வன உயிரியல் பூங்காவிற்கு சென்ற காஜல் மலைப்பாம்பை ஒன்றை தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்ட அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பாம்பு இருப்பதை உங்களால் உணர முடிகிறதா? என்று ஒருவர் கேட்க, காஜல் கூறியதாவது,

ஆமாம் என்னால் உணர முடிகிறது. இந்த உணர்வு அற்புதமாக இருக்கிறது. பாம்பின் தசைகள் அசைவதை என்னால் தெளிவாக உணர முடிகிறது.

பாம்பின் மெல்லிய சத்தமும் எனக்கு கேட்கிறது. இது ஒரு ஸ்வாரஸ்ய அனுபவம் என்று கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]