மலைப்பாம்பு வீடியோவால் சிக்கலில் மாட்டிய காஜல் அகர்வால்

மலைப்பாம்பு வீடியோவால் சிக்கலில் மாட்டிய காஜல் அகர்வால்

அன்மையில் நடிகை காஜல் அகர்வால் குடும்பத்தாருடன் விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்றபோது ஒரு மலைப்பாம்பை தனது கழுத்தில் போட்டுக்கொண்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோவுக்கு ‘என்ன ஒரு அனுபவம்’ என்று தலைப்பும் வைத்தார். இப்பொழுது அந்த வீடியோ அவருக்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்தவர்கள், ‘உங்கள் செயல் விலங்குகளை கொடுமைப்படுத்துவதை ஊக்குவிப்பது போல் உள்ளது’ என்று கண்டித்து உள்ளனர்.

இது குறித்து ஐதராபாத்தை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் பாயல் குரானா கூறும்போது,

‘பாம்புகளை கூண்டுக்குள் அடைத்து வைப்பதால் தொல்லைகளை அனுபவிக்கின்றன. சுதந்திரமாக இருக்க வேண்டிய பாம்புகளை மனிதர்கள் பொழுதுபோக்கு பொருளாக பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது.

காஜல் அகர்வால் பாம்புடன் இருக்கும் வீடியோவை பார்க்கும் அவரது ரசிகர்களும், அதேபோல் பாம்பை துன்புறுத்த நினைப்பார்கள். பிரபலமாக இருப்பவர்கள் தங்கள் செயலில் கவனமாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]