மலேரியா அற்ற நாடாக இலங்கை காணப்படுவதால் அதனை தக்க வைத்துக் கொள்ளவேண்டும்- திருமதி மேகலா ரவிச்சந்திரன் தெரிவிப்பு!!

உலகத்தில் இரண்டு நிமிடங்களுக்கு ஒருவர்; மலேரியாவினால் உயிரிழக்கின்றனர். இலங்கை மலேரிய அற்ற நாடாக காணப்படுகின்றது. அதனை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மலேரியா தடைப்பரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி மேகலா ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் நாலு பேருக்கு மாத்திரமே மலேரியா அடையாளம் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் மலேரியாவின் தாக்கம் இல்லை எனவும் தெரிவித்த அவர் இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வருபவர்களே மலேரியாவை இலங்கை;கு காவுகின்றவர்களாக காணப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் உலகத்தில் இரண்டு நிமிடங்களுக்கு ஒருவர்; மலேரியாவினால் உயிரிழக்கின்றனர். இலங்கை மலேரிய அற்ற நாடாக காணப்படுகின்றது. அதனை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் நாலு பேருக்கு மாத்திரமே மலேரியா ஏற்பட்டது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2013ம் ஆண்டு மலேரியா தொற்றுக்கு எவரும் ஆளாகவில்லை. 2014ல் இருவருக்கும்; 2015ல் இருவருக்கும் மலேரியா ஏற்பட்டதுடன் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் மலேரியாவினால் யாரும் பாதிக்கப்படவில்லை.

அதே போன்று இவ்வாண்டிலும் இது வரைக்கும் யாருமே மலேரியா ஏற்படவில்லை.

மலேரியா இல்லாத நிலையில் எமது நாடு காணப்பட்டாலும் இதை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

மலேரியா நமது நாட்டுக்குள் வராமல் நமது நாட்டை பாதுகாத்துக் கொள்ள வெண்டும்.

மலேரியாவினால் ஒரு இறப்புக் கூட நமது நாட்டில் வரக் கூடாது. வெளிநாடுகளில் இருந்து மலேரியா தொற்றுடன் வருபவர்களும் நமது நாட்டில் மரணித்து விடக் கூடாது. அவர்களை கண்டு பிடித்து அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்க வேண்டும்.

இது இரண்டும் தான் மலேரியா தடுப்பு இயக்கத்தின் குறிக்கோளாகும்.

மலேரியா வராத நிலையில் அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக வெளிநாடு செல்பவர்கள் உள்ள இடங்களில் குறிப்பாக விமான நிலையத்தில் மலேரியாவுக்கு என ஒரு பகுதி இருக்கின்றது.

அங்கு பரிசோதனை மேற் கொள்ளப்படுகின்றது. மலேரியாவுடன் வருபவர்களை அடையாளம் கண்டு அவர்களை பரிசோதனை செய்து கண்கானித்து வருகின்றோம்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் அதே போன்று இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் காலத்துக்காலம் நாடு திரும்பும் போது அவர்களை நாங்கள் பரிசோதனை செய்வதுடன் கண்கானித்து வருகின்றோம் என மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி கிறேஸ் நவரட்ண ராஜாவும் கலந்து கொண்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]