மலேசிய தூதுவர் திருப்பியழைப்பு

மலேசிய தூதுவர்

மலேசியப் பிரதமரின் பயணத்துக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில், கொழும்பில் இருந்த மலேசிய தூதுவர் வான் சைதி வான் அப்துல்லா திடீரென மலேசிய அரசினால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி இரவு கொழும்பு வரும், மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் , 19ஆம் திகதி வரை தங்கியிருப்பார்.

மலேசியப் பிரதமர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள தமது தூதுவரை மலேசிய அரசாங்கம் திருப்பி அழைத்துள்ளது.

தீவிரமான காரணங்களினாலேயே மலேசியத் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், திருப்பி அழைக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை.

இந்த நிலையில் மலேசியப் பிரதமரின் பயண ஒழங்குகளைக் கவனிக்க, மலேசிய வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]