விஜய், அஜித் இல்லை சிவா, கார்த்தி பங்கேற்பு… ! கலைகட்டும் மலேசியா

மலேசியா நட்சத்திரக் கலைவிழா: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக பல நடிகர், நடிகைகள், கலைக் குழுவினர் மலேசியாவிற்குப் பயணமாகியுள்ளனர். நேற்று முன்தினம் மலேசியாவிற்கு சுமார் 150க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் ஒரே விமானத்தில் பயணமாகி உள்ளனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருக்கு அடுத்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய், இந்த கலை விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள் எனத் தெரிகிறது. rajinikanth


அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என்பதை பாலிசியாகவே வைத்திருக்கிறார். அது குறித்து பல முறை சர்ச்சைகள் எழுந்துள்ளன. சிம்பு உள்ளிட்ட சிலரும் இந்த நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]