131 இலங்கையர்கள் மலேசியாவில் கைது

மலேசியா பாதுகாப்பு பிரிவினரால் 131 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு, மலேசிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த நபர்களே, மலேசிய தெற்கு கடல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் 7 சிறுவர்கள் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த இலங்கையர்களை அழைத்துச் சென்ற இந்தோனேஷிய நாட்டவர்கள் 3 பேர் மற்றும் மலேசிய நாட்டவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு விதிமுறைகளை மீறியமை, மனித கடத்தல், பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் யொகோ பாரு எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அகதி முகாமைத்துவ முகவர் நிலையத்தினால் 43 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருந்தமையும், ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]