மலேசியப் பிரதமர் – சி.வி சந்திப்பை தடுக்க முயற்சி

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் சந்திப்பதைத் தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டதாக, வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த மலேசியப் பிரதமர் ரசாக், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.

தமது தலைவர்கள் யாரையும் சந்திப்பதற்கு மலேசியப் பிரதமர் தெரிவு செய்யாதமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோபமடைந்தது.இந்த விவகாரம் குறித்து கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியிருந்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சருடனான மலேசியப் பிரதமரின் சந்திப்பை ரத்துச் செய்யும் முயற்சிகளில் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் ஈடுபட்டனர். எனினும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

பிரதமர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்வதற்கும் முதலில் திட்டமிட்டிருந்தார் என்று மற்றொரு அதிகாரி வலியுறுத்திக் கூறியிருந்தார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனான பிரதமரின் சந்திப்பு மிகவும் வெற்றிகரமானதாக இருந்தது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]