மலிங்க எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டார்? ஐபில் ஏல விபரம் இதோ!..

இன்று 2019 ஐபில் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் ஆரம்பமானது.

இந்த ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 346 வீரர்கள் தான்  இறுதி பட்டியவுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர்.

இலங்கை வீரர் மலிங்கவை மும்பை அணி 2 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் பிராத்வெயிடை ரூ.5 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்ஸர் பட்டேல், ரூ 5 கோடிக்கு  டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்திய வீரரான ஹனும விகாரி்யை  2 கோடிக்கு டெல்லி அணி எடுத்தது. இந்திய வீரர் அக்சர் பட்டேலை 5 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கிய நிலையில், குர்கீரத் சிங்-ஐ அடிப்படை விலை 50 லட்சத்திற்கு பெங்களூர் அணி வாங்கியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]