மலிங்கவை ஊடகங்களே தூண்டின : தயாசிறி ஜயசேகர

லசித் மலிங்க எனக்கு எதிரான கருத்துகளை வெளியிட ஊடகங்களே தூண்டின என்று விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

கிரிக்கெட் வீரர்கள் எவரையும் தாக்க வேண்டும் என்று நான் எவ்வித கருத்துகளையும் தனிப்பட்டவர்களை மையப்படுத்தி கூறவில்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு பிட்னஸ் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியியே நான் கருத்துகளை வெளியிட்டேன். கிரிக்கெட் வீரர்கள் மாத்திரமல்ல ஏனைய விளையாட்டு வீரர்களுக்கும் பிட்னஸ் இல்லை. இது யதார்த்தமான உண்மை. இதனை சரிசெய்ய வேண்டிய வேலைத்திட்டமொன்று அவசியமாகவுள்ளது.

மலிங்கவை ஊடகங்களே

மலிங்க எனக்கு எதிரான கருத்துகளை வெளியிட ஊடகங்களே காரணம். ஊடகங்ளின் செயற்பாட்டல்தான் இந்த விவகாரம் பூதாகரமானது. எனவே, ஊடகங்கள் பொருப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

அத்துடன், மலிங்க சிறந்த ஒரு வீரர். அவர் நாட்டுக்கு அத்தியவசிய வீரர் என்றும் கூறினார்.

மலிங்கவை ஊடகங்களே

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]