மற்றுமொரு கூட்டு எதிரணி உறுப்பினர் பல்டி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மகஜன எக்சத் பெரமுனவின் உப தலைவருமான சோமவீர சந்திரசிறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வெற்றிக்கு உழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்த அவர் இன்று இதனைக் கூறியுள்ளார். இவர் ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்பட்டு வந்தகவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]