மற்றுமொரு உலகக்கிண்ணத்தை வெற்றிப்பெறுவதில் ‘அர்ஜுண’வுக்கு விருப்பமில்லை

தயாசிறி ஜயசேகர

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு வெட்கம் இருந்தால் அவர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

முன்னர், துறைமுகத்தை நாசமாக்கிய அவர், தற்போது எரிபொருள் கூட்டுத்தாபனத்தை நாசமாக்குவதாக அவர் கூறியுள்ளார்.

எண்ணைக் கப்பல் வரும்வரை பொதுமக்களை வரிசையில் நிறுத்திவைத்த அமைச்சர் அவர் என தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் தோல்வி குறித்து அமைச்சர் அர்ஜுண முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

உண்மை என்னவென்றால், இலங்கை அணி மற்றுமொரு உலகக்கிண்ணத்தை வெற்றிக்கொள்வதில் அர்ஜுண ரணதுங்கவுக்கு விரும்பம் இல்லை. அவர் மாத்திரமே அதன் உரிமையாளராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளார்” என்றும் அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]