கிறிஸ்மஸ் பண்டிகை

உலகில் பெருந் தொகையினரால் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்றான கிறிஸ்மஸ் பண்டிகை பற்றியே நாம் பார்க்கப் போகின்றோம். கிறிஸ்மஸ் தினம், வருடா வருடம் டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்தவர்களால் மாத்திரம் அல்லாமல் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாலும்கூட மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற ஒரு தினமாகும்.

சொற்பிறப்பு

கிறிஸ்மஸ் தினம், “நத்தார் பண்டிகை”, “கிறிஸ்மஸ்” (Christmas), ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’, ‘ xmas ‘ என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. Christmas என்னும் சொல் ‘christ’s mass’ என்பதன் சுருங்கிய வடிவமாகும். இச்சொல் பழைய ஆங்கில மொழியில் ‘cristemasse’ எனவும் இடைக்கால ஆங்கில மொழியில் ‘cristmasse’ எனவும் வழங்கிற்று. Christmas என்ற தற்காலச் சொல் khristos என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும் missa என்ற இலத்தீன் சொல்லில் இருந்தும் பிறந்ததாகும். கிறிஸ்மஸ் என்கின்ற பதத்தை தமிழில் நத்தார் தினம் என்று சிலர் மொழி பெயர்ப்பதுண்டு.

ஆனால் இது தமிழ் அல்ல. நத்தார் என்பது கிறிஸ்துமஸ் என்பதற்கான natal என்ற போர்த்துக்கேய மொழிச் சொல்லின் தமிழாக்கமாகும். இது இப்போது இலங்கையில் பயன்பாட்டில் இருந்தாலும், கிறிஸ்துமஸ் என்பதே முதன்மையாக உள்ளது. இலத்தீன் மொழியில் பிறந்த நாள் என்பது dies natalis ஆகும். இயேசுவின் பிறந்த நாளைக் குறிக்க nativitas (ஆங்கிலம் = nativity) என்ற சொல்லும் வழக்கில் உள்ளது.

கிறித்து பிறப்புப் பெருவிழா

கிறித்துமசு (christmas) அல்லது கிறித்து பிறப்புப் பெருவிழா (நத்தார்) ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறித்துக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவானது கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

கிறித்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன. ஜனவரி 6, 19 ஆகிய தினங்களிலும் சில நாடுகளில் கொண்டாடப்படுகிறது. கிறித்துமசு கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.

கிறிஸ்மஸின் தோற்றம்

குளிர்கால கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாகரிகத்திலும் மிக முக்கியமான கொண்டாட்டங்களாக இருந்து வந்துள்ளன. அதற்கு அமைவான விழாவாகவே கிறிஸ்மஸ் ஆரம்பத்தில் பார்க்கப்பட்டது. தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் முன்னுரிமை குறைந்த கொண்டாட்டமாக கருதப்பட்டது. மேலும் ஆரம்பகால கிறிஸ்துவ சமூகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விரும்பப்படவில்லை. இன்றைய சமூகத்தில் கிறிஸ்துமஸ் முக்கிய கொண்டாட்டமாக வளர்ந்திருப்பதற்கு கிறிஸ்தவதுக்கு முன்னதான குளிர்கால கொண்டாட்டங்களின் பாதிப்பும் காரணம் எனக்கருதப்படுகிறது.

ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the Encyclopedia Americana – கூறுகின்றது.

கிறிஸ்மஸானது, இத்தாலி போன்ற நாடுகளில் காணப்பட்ட “சட்டர்நாலியா” (சடுர்நலியா பண்டிகை- Saturnalia) மற்றும் உரோமர்களால் டிசம்பர் 25 இல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன் (Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti – (சோல் இன்விக்டுஸ்) என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக வரலாற்று நிபுணர்கள்க ருதுகின்றனர். இற்றைக்கு 3000 வருடங்களுக்கு முன்னரே – அதாவது இயேசுக்கிறிஸ்து பிறப்பதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியிலேயே டிசம்பர் 25 ஆம் திகதி ஒரு மிகப்பெரிய கொண்டாட்டதினமாக இருந்து வந்தது – ரோமர்களுக்கு. ரோமர்கள், மித்ரா அல்லது சதுமாலியா (Saturnalia) என்ற தமது முக்கிய கடவுளின் பிறப்பினைக் கொண்டாடுகின்ற ஒரு தினமாகவே அந்த நாள் இருந்து வந்தது. மித்ரா என்பது சூரியப் புதல்வன். அந்த சூரியப் புதல்வன் வருடா வருடம் டிசம்பர் 25 ஆம் திகதி பிறப்பார். அந்தத் தினத்தை ரோமர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 23ம் திகதி என்பது மிக மிகக் குறுகிய பகலைக் கொண்ட ஒரு தினம் என்பது எம் அனைவருக்கும் தெரியும். அதாவது ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 23ம் திகதியில் சூரியன் வெகு சீக்கிரமாகவே அஸ்தமித்து விடும். ஐரோப்பாவில் அன்றைய தினத்தில் 4 மணிக்கெல்லாம் இரவு வந்துவிடும். சூரியனை இருள் கொலை செய்து விடுகின்ற தினமாக நினைத்தார்கள் புராதன ரோமர்கள். சூரியனின் புதல்வனான மித்ரா மீண்டும் பிறக்கின்ற தினமாக புராதன ரோமர்களால் அடையாளப்பட்ட தினம்தான் டிசம்பர் 25. அந்தத் தினத்தில் ரோமர்களிடையே கொண்டாட்டங்கள் மிகப்பலமானதாக இருந்தன.

மற்றுமொரு வகையில், மார்ச்சு மாதம் 25ஆம் நாள் மரியா இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவியது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் 25இல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாடலாஎதிர்ப்புகள்யினர். எனவே, இன்றைய ஆய்வு முடிவுகளின்படி, இயேசு கிறித்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில்

பண்டைக் காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த சோல் இன்விக்டி விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர்

என்றும் இதனை உறுதிப்படுத்தும் வகையில், கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள்உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும், இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும், சிப்ரியன் (Cyprian) என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின் ‘எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…. கிறிஸ்த்துவும் பிறந்தது….’ ‘ Oh , how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born…’ என்கின்ற வாக்குமூலத்தையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற “சோல் இன்விக்டுஸ்- கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது” என்கின்ற கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் வாக்குமூலம் போன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.
மற்றுமொரு மரபின் படி, யூல் பண்டிகை (சூரிய சக்கரத்தை எரியூட்டுதல்) ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்களால் டிசம்பர் கடைசி தொடக்கம் சனவரி ஆரம்பம் வரையான பகுதியில் கொண்டாடப்பட்டது. வடக்கு ஐரோப்பாவே கடைசியாக கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டமையால் அதன் ஆதி வழிபாட்டு முறைகள் கிறிஸ்துமசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்கென்டினேவியர் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற பதம், 900 ஆண்டு முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் என்பதற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பயன்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

மற்றுமொருவகையில், ‘செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்’ (Sextus Julius Africanus) என்கின்ற மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 இல் பிறந்தார் என்கின்ற கருத்தை முன்வைத்ததன் விளைவாக, டிசம்பர் 25 இயேசு பிறந்த தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் கிழக்குத் திருச்சபை கிறிஸ்தவர்கள் குழந்தை இயேசுவைக் காண கிழக்கில் இருந்து ஞானிகள் வந்ததை கொண்டாடும் திருநாளின் (சனவரி 6) ஒரு அங்கமாக பிறப்பையும் கொண்டாடினராயினும் இயேசுவின் திருமுழுக்குக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியும் ஒளியும் கொணர்ந்தது என்பதை வலியுறுத்தும் வகையில் சனவரி 6 கிறிஸ்து பிறப்புவிழாவாகக் கீழைத் திருச்சபையின் பல பிரிவினரால் கொண்டாடப்பட்டது. இன்றும் அப்பழக்கம் நிலவுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவ்விழாவை இறைக்காட்சி விழா (Epiphany) என்று அழைக்கிறது.

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது என்னும் மிகப்பழைமையான குறிப்பு கி.பி. 354ஆம் ஆண்டளவில் உரோமில் தொகுக்கப்பட்ட பிலோகலசின் நாட்குறிப்பில் காணப்படுகிறது. கொன்சாந்தினோபிலுக்கு கி.பி 379இலும் அந்தியோக்கியாவுக்கு 380இலும் அலெக்சாந்தரியாவுக்கு சுமார் 430இலும் இவ்விழா அறிமுகப்படுத்தப்பட்டது. கொன்சாந்தினொபிலில் கிறிசொஸ்டொம் கி.பி. 400இல் ஆயராக பதவியேற்றப்பின்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய காலத்தில் ஐரோப்பாவின் மத்தியக்காலத்தில் கிறிஸ்துமஸ் தொடர்பான திருநாட்கள் முக்கியத்துவமைடைந்து காணப்பட்டன. கிறிஸ்துமசுக்கு முன் 40 நாட்கள் “புனித மார்டினின் நாற்பது நாட்கள்” (இது நவம்பர் 11 இல் ஆரம்பித்தது) என அழைக்கப்பட்டது, தற்காலத்தில் திருவருகைக்காலம் (Advent) என இது அழைக்கப்படுகிறது. இத்தாலியில் சடுர்நெலிய அம்சங்கள் வருகைக்கால முறைமைகளுக்குள் உள்வாங்கப்பட்டது. 12வது நுற்றாண்டளவில் இவ்வம்சங்கள் கிறிஸ்துமசின் 12 நாட்களுக்குள் (டிசம்பர் 26-சனவரி 6) ஊடுகடத்தப்பட்டன. இங்கிலாந்தில் கிறிஸ்துமசின் முக்கியத்துவம் பேரரசர் சார்லிமேன் (Charlemagne) கி.பி. 800ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டப் பட்டதனாலும் இங்கிலாந்தின் முதலாவது வில்லியம் மன்னர் 1066 கிறிஸ்மஸ் நாளன்று முடிசூட்டப்பட்டதனாலும் அதிகரித்தது.

உயர் மத்திய காலத்தில் வரலாற்று நூல்கள் பல முக்கிய நபர்கள் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடியதை குறித்துள்ளன. இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் 1377ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தொன்றை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. யூல் பன்றி மத்திய கால கிறிஸ்துமஸ் விருந்துகளில் கட்டாய அங்கமாக காணப்பட்டது. கெரொல் பாடல் இசைப்பதுவும் இக்காலத்தில் பிரபலமடைந்து வந்தது. ஆரம்பத்தில் கெரொல் குழு நடனமாடுபவர்களால் ஆனதாக காணப்பட்டது. குழுவில் ஒரு தலைமை பாடகரும் அவரைச் சுற்றி நடனமாடும் குழுப்பாடகர்களையும் கொண்டிருந்தது.
அக்காலத்தின் பல எழுத்தாளர்கள் கெரோல் இசையை சடுர்நலிய, யூல் அம்சங்களின் தொடர்ச்சி என சாடினார்கள். 1660 இல் இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் கிறிஸ்துமஸ் மீதான தடையை நீக்கியதன்
காரணமாக கிறிஸ்மஸ் விழா புத்தெழுச்சி பெற்றது. 1820களில் இங்கிலாந்தின் பிரிவினைவாதம் தலைதூக்கியிருந்த காலத்தில் பலஎழுத்தாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அருகிக்கொண்டு போவதாக கருதினார்கள். அவர்கள் கிறிஸ்துமஸ் மனமார்ந்த ஒரு கொண்டாட்டத்துக்கான காலமாக கருதியால் அதனை மீட்பிக்க பல முயற்சிகளை செய்தனர்.

1843 இல் சார்ல்ஸ் டிக்கின்ஸ் வெளியிட்ட ‘கிறிஸ்மஸ் கெரொல்ஸ்’ என்ற நூல் கிறிஸ்துமஸ் பண்டிகையை சமூக களியாட்டம் வீண்விரயம் செய்யும் காலமாக அல்லாமல் குடும்பம், நல்லெண்ணம், கருணை போன்றவற்றில் மையப்படுத்தி கொண்டாடும் பழக்கத்தை முன் கொணர்வதில் முக்கிய பங்காற்றியது.

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வாசிண்டன் இர்விங் என்ற எழுத்தாளரின் ‘The Sketch Book of Geoffrey Crayon”, “Old Christmas” போன்ற சிறுகதைகள் காரணமாக அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீள்ப்பிக்கப்பட்டன. இச்சிறுகதைகளில் இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்பட்டதாக எழுத்தாளர் கூறிய விடுமுறைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஆனால் சிலர் இர்வினின் நூலில் வரும் விடுமுறை தொடர்பான கூற்றுகள்க ற்பனையானவை என்றும் பின்னாளில் அமெரிக்கர்கள் அந்நூலில் உள்ளவற்றை பின்பற்றியதன் மூலமே நூலில் உள்ள விடுமுறைக் கலாச்சாரம் தோன்றியதாகவும் கருதுகின்றனர். மேலும் அமெரிக்க உள்நாட்டு போரைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு

வந்த அதிகளவான யேர்மனிய குடிவரவாளர்கள் ஐரோப்பிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அமெரிக்காவுக்கு கொணர்வதில் முக்கிய பங்காற்றினார்கள். 1870ம் ஆண்டு ஜூன் 26ம் திகதிதான் டிசம்பர் 25ம் திகதியை முதன் முதலில் ஒரு விடுமுறை தினமாக அறிவித்திருந்தது அமெரிக்கா. 20ஆம் நூற்றண்டும் அதன் பிற்பட்ட காலத்திலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இன்னும் புத்தெழுச்சி பெற்றது. 1914 இல் முதலாம் உலகப் போரின் போது, பிரித்தானிய, யேர்மனிய இராணுவ வீரர்களிடையே அதிகாரபட்சமற்ற போர்நிறுத்த உடன்பாடொன்று காணப்பட்டது. இதன் போது இராணுவத்தினர் தாமாகவே போர் செய்வதை நிறுத்திவிட்டு
கெரோல் இசைக்க தொடங்கிவிட்டார்கள். இப்போர்நிறுத்தம் கிறிஸ்மஸ் அன்று தொடங்கி சில நாட்கள் நீடித்தது எனப்படுகிறது. 21ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் கிறிஸ்தவ மற்றும் மதசார்பற்ற அம்சங்களைக் ஒன்றுசேர கொண்டுள்ளது. கால ஓட்டத்தில் உலகம் வியாபாரமயப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்களை வியாபார உலகம் தனது கரங்களில் எடுத்துக் கொண்டது. இன்று கிறிஸ்மஸ் என்பது தவிரக்க முடியாத ஒரு கொண்டாட்டமாக மாறிவிட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தற்போது ஒரு சமூக விழாவாக, குடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்மஸ் தின கொண்டாட்டத்துக்கான எதிர்ப்புகள்

கி.பி. முதலாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ரோமாபுரியில் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. ஆதிக் கிறிஸ்தவர்கள் மறைந்து மறைந்தே தமது மத நடவடிக்கைகளை நிறைவேற்றி வந்தார்கள். இதற்கு “ஒரிஜென்” Origen – போன்ற ஆரம்பகால முக்கிய கிறிஸ்த்தவ மதகுருக்களே மிக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ இறையியல் அறிஞரான ஒரிஜென், “பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும் பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார். எட்வட் கிப்பன் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி ஆரியவாதம் (Arianism) மிகுந்து காணப்பட்ட கொன்சாந்தினொபிலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐரோப்பாவின் ஆரம்ப மத்திய காலத்தில் கிறிஸ்துமசின் முக்கியத்துவம் திருக்காட்சி விழா (மூன்று அரசர் திருவிழா) திருநாளினால் குறைக்கப்படிருந்தது.puritan

கிறிஸ்தவ சமய மறுசீரமைப்பின்போது சீர்திருத்தத் திருச்சபைகள் கிறிஸ்துமஸ் கொண்டாங்களை “பாப்பரசரின் ஆடம்பரம்” எனவும், தூய்மை வாதிகள் என்னும் பிரிவினர் (Puritans) கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டத்தை “விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி” எனவும் கண்டித்தனர்.

இதற்குப் பதில்மொழி தரும் விதத்தில் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் வெளி ஆடம்பரங்களைக் குறைத்து, அதன் உள்ளார்ந்த சமய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து உள்நாட்டு போரின் போது முதலாம் சார்ல்ஸ் மன்னனை பாராளுமன்றம் வென்றதன் காரணமாகா இங்கிலாந்தின் தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்பு ஆட்சியாளர்கள் 1647 இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இங்கிலாந்தில் தடை செய்தனர். இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் ஆதரவு கலவரங்கள் பல நகரங்களில் வெடித்தது. கண்டர்பெரி பல கிழமைகளுக்கு கலகக்காரர்களின் வசமிருந்தது. அவர்கள் ஒஃலி கிளைகளால் பாதைகளை அலங்கரித்தோடு அரசனுக்கு ஆதரவளிக்கும் வாசகங்களையும் காட்சிப்படுத்தினார்கள். 1660 இல் இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் கிறிஸ்துமஸ் மீதான தடையை நீக்கினார்கள். இன்னமும் சில அங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஏற்க முன்வருவதில்லை என்பதும் குறிப்பிடற்பாலது. அமெரிக்காவின் புதிய இங்கிலாந்தில் தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்பினர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை எதிர்த்தார்கள்;. பொஸ்டன் நகரில் 1659 தொடக்கம் 1681 வரையான காலப்பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டிருத்தது. அதே காலப்பகுதியில் நியூயார்க் வர்ஜீனியா நகர மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கொண்டாடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தின் கலாச்சரம் எனக் கருதப்பட்டதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் பாலான ஈர்ப்பு அமெரிக்காவில் குன்றியது. கிறிஸ்மஸ் தினம் என்பது ஒரு விக்கிரக வழிபாடு என்று கூறி 1649 முதல் 1660 வரை இங்கிலாந்திலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இயேசுக் கிறிஸ்து டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளும்படியான எந்தவித ஆதாரமோ அல்லது தகவலோ கூட இல்லை. இன்னும் குறிப்பாகக் கூறுவதானால், பைபிளை அடிப்படையாகவைத்து நோக்கும் பொழுது, இயேசுக் கிறிஸ்து டிசம்பர் மாதத்தில் பிறந்திருப்பதற்கான சந்தர்ப்பமே இல்லை என்றே சில ஆராய்ச்சியாளர்கள் கூறி, கிறிஸ்த்து தின விழாவை மறுக்கின்றனர். அத்தோடு இயேசுவேடு இருந்தவர்கள் இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள், இயேசுவின் சீடர்கள், இயேசுவைப் பின்பற்றியவர்கள் என்று எவருமே இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடியதாக பைபிளில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை என அவர்கள் கருதுகின்றனர்.puritans

கிறிஸ்மஸ் கொண்டாடத்துக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கி.பி. முதலாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ரோமாபுரியில் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. ஆதிக் கிறிஸ்தவர்கள் மறைந்து மறைந்தே தமது மத நடவடிக்கைகளை நிறைவேற்றி வந்தார்கள். ஆதிகாலக் கிறிஸ்தவர்களுக்குப் பெரிய தர்மசங்கடம் உண்டானது. அன்னிய தெய்வங்களுக்கு என்று நடாத்தப்படும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும் முடியாது – ஏன் என்றால் அது ஒரு விக்கிரக ஆராதனை. அதேவேளை அந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருக்கவும்
முடியாது. ஏனென்றால் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பது அவர்களைக் கிறிஸ்தவர்கள் என்பதை ரோம ஆட்சிக்கு அடையாளம் காண்பித்து விடும். கொலை செய்யப்பட்டு விடுவார்கள். எனவே ஒரு காரியம் செய்தார்கள். டிசம்பர் காலக் கொண்டாட்டங்களின் பொழுது மற்றைய ரோமாபுரி மக்களைப் போலவே ஆதிக்கிறிஸ்தவர்கள் தாமும் தமது வீடுகளை அலங்கரித்தார்கள். ஆனால் அவர்கள் கொண்டாடியது அன்னிய தெய்வப் பிறப்பை அல்ல. மாறாக அவர்கள் கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூர்ந்தார்கள். இயேசுவின் பிறப்பு டிசம்பரில் நினைவுகூரப்படத் தொடங்கியது இப்படித்தான்.
கால ஓட்டத்தில் ரோமாபுரி முழுவதுமாக கிறிஸ்தவ தேசமாக மாறி, கிறிஸ்தவ மதம் ரோமின் உத்தியோகபூர்வ மதமாக மாறியதைத் தொடர்ந்து இயேசுவின் பிறப்பு பகிரங்கமாகவே நினைவுகூரப்படத் தொடங்கியது.

அந்தக் காலகட்டங்களில, அதாவது முதலாம் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறப்பு எப்பொழுது என்பது தொடர்பான பலவித தடுமாற்றங்கள் கிறிஸ்தவர்களிடையே காணப்பட்டு வந்தது. கிரேக்கத்தில் ஒரு தினமும், தற்போதைய துருக்கியில் வேறொரு தினமும், ரோமில் வேறு வேறு தினங்களிலும், கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்திருந்த மற்றய தேசங்களில் வேறு வேறு தினங்களிலும் கிறிஸ்துவின் பிறப்பு நினைவுகூறப்பட்டு வந்தது மே 20ம் திகதி, ஏப்ரல் 18 ம் திகதி;, ஏப்ரல் 19 ம் திகதி, மே 28 ம் திகதி, ஜனவறி2 ம் திகதி, நவம்பர்27 ம் திகதி, நவம்பர் 20 ம் திகதி,மார்ச் 21 ம் திகதி, மார்ச் 24 ம் திகதி.. இந்த நாட்களிலெல்லாம் இயேசுவின் பிறந்த தினம் நினைவுகூரப்பட்டு வந்ததாக சரித்திரப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இயேசு பிறந்து சுமார் 350 வருடங்கள் வரை இயேசு பிறந்த திகதி தொடர்பான பலத்த தடுமாற்றம் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படவே செய்தது. ஆனாலும் நூற்றுக்கணக்கான வருடங்களாக டிசம்பர் 25ம் திகதி தமது சூரியப் புதல்வனுக்கு விழா எடுத்து வந்த கலாச்சாரத்தில் இருந்து ரோமாபுரி மக்காளால் மீள முடியவில்லை. எனவே டிசம்பர் 25ம் திகதியை இயேசுவின் பிறப்பாக மாற்றுவதின் மூலம் ரோமாபுரி மக்களை கிறிஸ்தவத்தின் பக்கம் கொண்டுவரலாம் என்று திட்டமிட்ட கத்தோலிக்கத் திருச்சபை ஒரு அறிவித்தலைச் செய்தது. கி.பி. 350 வருடம் ரோமத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் பாப்பாண்டவர் முதலாவது ஜூலியஸ் ஆண்டகை இயேசுவின் பிறந்த தினமாக டிசம்பர் 25ம் திகதியே உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தலை விடுத்தார். அன்றிலிருந்து டிசம்பர் 25ம் திகதி இயேசுவின் பிறப்பு நினைவுகூரப்படுகிறது. கடவுள் பூமியில் மனிதனாகப் பிறந்தார். அவரின் பெயர் இயேசுக் கிறிஸ்த்து. அந்த இயேசுக் கிறிஸ்து பூமியில் அவதரித்த தினம்தான் டிசம்பர் 25. அந்தத் தினத்தைத்தான் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் என்று கொண்டாடுகின்றார்கள்.

அனுசரிப்புகள்

நீண்ட விடுமுறை, கிறிஸ்மஸ் மரம் சோடிப்பது. பரிசுகள் பரிமாறிக் கொள்வது. கிறிஸ்மஸ் தாத்தாவிடம் பரிசுகளை வாங்குவது… கிறிஸ்மஸ் என்றவுடன் எங்களுக்கு நினைவில் வருகின்ற உபரியான விடயங்கள் இவை. இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறித்துமசு தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறித்தவக் கருத்துகளோடு, கிறித்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறித்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.

டிசம்பர் 24ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். கிறிஸ்து பிறப்புவிழாவிற்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை இயேசு,மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செஷரூபங்களை வைப்பர். விண்மீன்க்கு அடையாளமாக காகதித்தாலான விண்மீன்களை வண்ண விளக்குக்களால் அலங்கரிப்பர். வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்துடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும், இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும். பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும்.

அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளைச் சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள் (Carols) இசைப்பார்கள். கிறித்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். இது சமய நல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

கிறிஸ்துமஸ் தாத்தா

இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்மஸ் தாத்தா என்பது இயேசு பிறப்பின் நினைவு கூரலில் தவிர்க்க முடியாத ஒரு அடையாளமாக மாறிவிட்டுள்ளது. கிறிஸ்மஸ் தின நினைவு கூறலில் இயேசுவின் பிறப்பு பற்றிய நற்செய்தி இருக்கின்றதோ இல்லையோ சன்டகுளோஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா கண்டிப்பாக இருந்து விடுவார். கிறிஸ்மஸ் தாத்தா பரிசில்களை வழங்குவது ஒரு கிறிஸ்மஸ் சம்பிரதாயமாகவே மாறியுள்ளது. இயேசு பிறந்த பொழுது கிழக்கில் இருந்து வந்த வான சாஸ்திரிகள், இயேசுவைத் தொழுது பரிசுகளைக் கொடுத்ததாக பைபிளில் கூறப்பட்டிருந்தாலும், டிசம்பர் தினக் கொண்டாட்டங்களின் பொழுது பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் ரோம் நகர கலாச்சாரத்தைக் கொண்டுதான் ஆரம்பமானதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.santa

டிசம்பர் காலப்பகுதியில் தமது சூரியப் புதல்வனின் பிறப்பினைக் கொண்டாடிய ரோமர்கள் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. கிறிஸ்மஸ் காலகட்டத்தில் பரிசுகள் பரிமாறுவதென்பது இங்கிருந்துதான் ஆரம்பமானதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றார்கள். அதேவேளை, ஸ்கன்டினேவிய நாடுகளில் இருந்து வந்த ஓடன் தெய்வ வழிபாட்டு மறையும், கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவாக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். குதிரையில் வானத்தில் பறக்கும் வழக்கத்தை உடைய நீண்ட வெள்ளைத் தடிவைத்த ஓடன் தெய்வம் வேண்டுபவர்களுக்குப் பரிசுகளையும், வரங்களையும் இல்லம் தேடி வந்து தருகின்ற ஒரு கடவுளாகப் பார்க்கப்பட்டு வந்தார். கையில் நீண்ட கம்பு, தொப்பி, தொப்பை, வெள்ளைத்தாடி இந்த ஓடன் தெய்வத்தின் அடையாளங்களுள் சில. கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவகம் இந்த ஓடன் கடவுளின் பிம்பமாக இருக்கலாம் என்று சில ஆராய்சியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். செயின்ட் நிக்கலஸ் 4ம் நூற்றாண்டில் பட்டாரா (தற்போதைய துருக்கி) என்ற இடத்தில் பிறந்து கத்தோலிக்கத் திருச்சபையின் ஒரு பிஷப்பாக இருந்த நிக்கலஸ் (Nikolas of Myra) என்பவர் ஏழைச் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி உதவி செய்தார், பலரை வறுமையில் இருந்தும், மரணத்தில் இருந்தும் தனது உதவிகளினால் காப்பாற்றினார் என்பது உண்மையான வரலாற்றுச் சம்பவம். அந்த நிக்கலஸ் என்ற பிஷப் பின்நாட்களில் கத்தோலிக்கத் திருச்சபையால் புனிதப்பட்டம் பெற்று சென்ட் நிக்கலஸ்(Saint Nicholas) ஆக அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அவரது பெயர் சன்டாகுளோஸ் (Santa Claus) ஆக மாறியது. ஆனால் இன்று கிறிஸ்மஸ் தாத்தாவாக அடையாளப்படுத்தப்பட்டுவரும், சிவப்பு உடை தலையில் தொப்பி, பன்னிரெண்டு மான்களை இணைத்து வானத்தில் மிதந்துவரும் ரதத்தில் வலம் வருவதாகக் காட்சிப்படுத்தப்படும்; நபருக்கும்; செயின்ட் நிக்களசுக்கும் – பரிசுப் பொருட்கள் என்பதற்கு அப்பால் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

உண்மையான Saint Nicholas இற்கும் தற்காலத்து சன்டகுளோசுக்கும் இடையில் சம்பந்தம் இல்லை என்பது மாத்திரமல்ல- உண்மையான கிறிஸ்தவச் சிந்தனைகளைத் தத்துவார்த்தங்களை சிதறடிக்கின்ற ஒரு அடையாளம்தான் இந்த நவீன கால சன்டகுளோஸ் என்று வாதிடுகின்றார்கள் சில கிறிஸ்தவ ஆர்வலர்கள். Saint Nicholas என்ற கத்தோலிக்க பிஷப்பை நகைச்சுவையான, குஸ்தி அடித்து வேடிக்கை காண்பிக்கும் நவீனகாலத்து சன்டகுளோஸ் ஆக மாற்றிய பெருமை கொக்கோகோலா நிறுவனத்தையே சாரும். 1931ம் வருடம் கோக்கோகோலா நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நடாத்தப்பட்ட பொப் இசை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பொப் இசைப் பாடகர் ஹடோன் (haddon Sundblom) சிவப்பு ஆடை, தொப்பி, தாடி அணிந்து கொண்டு மக்களைப் பரவசப்படுத்திய தோற்றம்தான் இன்றைய சண்டகுளோஸ்.

கிறிஸ்துமஸ் மரம் (Christmas Trees)

கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்களின் பொழுது வீடுகளில், ஆலயங்களில், வியாபார நிலையங்களில் வைக்கப்படுகின்ற கிறிஸ்மஸ் மரங்கள்கூட கிறிஸ்தவம் அல்லாத கலாச்சாரப் பின்னனியைக் கொண்டதாகவே பதிவுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவில் கிறிஸ்தவம் பரவுவதற்கு முன்னதாக ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் குறிப்பாக ஜேர்மனியில் யூலே(Yule) என்ற தெய்வத்திற்கான வழிபாட்டின் பொழுது, பச்சை மரங்களைக் கொண்டு வீடுகளை அலங்கரிப்பது வழக்கம். மார்கழிமாத்தில் இந்த சம்பிரதாயங்களை ஐரோப்பியர்கள், குறிப்பாக ஜேர்மனியர்கள் செய்வது வழக்கம். இதுதான் பின்நாட்களில் கிறிஸ்மஸ் மரங்களாக உருவானது. மற்றொரு வகையில், 1500ம் வருடத்தில் புரட்டஸ்டாந்து மதத்தின் ஸ்பகரான ஜேர்மனியைச் சேர்ந்த மார்டின் லூதர் டிசம்பர் மாதம் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ஒரு அழகான காட்சியைக் கண்டார். ஒரு மரத்தின் பின்னணியில் வான

த்து நட்சத்திரங்கள் ஜெலித்துக் கொண்டிருந்த காட்சி அவரை மிகவும் கவர்ந்தது. நீண்ட நேரம் அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பிய அவர் அந்தக் காட்சியை தனது குடும்பத்தாருக்கும் செய்து காண்பிக்க விரும்பினார். வீட்டின் நடுவே ஒரு மரத்தை வைத்து அதில் மெழுகுவர்த்திகளை ஏற்றி தான் வெளியே நட்சத்திரங்களின் பின்னணியில் கண்ட மரத்தின் காட்சியை காட்சிப்படுத்தினார். இதுதான் பின்நாட்களில் கால ஓட்டத்தில் வர்ணமின்குமிழ்கள் ஜொலிக்கும் கிறிஸ்மஸ் மரம் ஆக மாறியது எனலாம்.

முதல் மரம்: ‘கிழக்கு பிரான்சு நாட்டில் மேற்கு ஜெர்மனியின் எல்லைக்கோட்டை ஒட்டி அமைந்துள்ள அல்சாஸில் (Alsace) முதல் ‘கிறிஸ்மஸ் மரம்’ வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பிரான்சு தேசம் முழுவதும் வீடுகளில் வைக்கும் பழக்கம் ஏற்பட தொடர்ந்து ஜெர்மனி, ரோம், நார்வே, ஆஸ்திரியா என வழக்கம் பல விழுதுகளாய் கால் பரப்பியிருக்கிறது. பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட், விண்ட்ஸர் கோட்டையில் 1841ம் ண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் மரத்தை வைத்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்மஸ் செய்தி விடுத்தார். அந்தக் கிறிஸ்மஸ் மரம் நார்வே நாட்டு மக்களின் அன்புப் பரிசாக அளிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் கைகொடுத்து உதவியதற்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் முகமாக இந்த மரத்தை அளித்தனர்.

இதனையடுத்து இங்கிலாந்து முழுவதும் வீடுகளில் கிறிஸ்மஸுக்கு கிறிஸ்மஸ் மரங்களை வீட்டில் வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.

11ம் நூற்றாண்டில் வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பியவில் வசித்த வைக்கிங் இனத்தவர்கள், பனிக்காலமானாலும் வெய்யில் காலமானாலும் என்றும் தன் பசுமைப் புன்னகை மாறாத பைன், ஸ்புஷரூஸ், சைப்ரஸ், யீ அல்லது பர் போன்ற மரங்கள், துயர் மிகுந்த இருண்ட பனிக்காலம் மறைந்து மீண்டும் வசந்தத்தை வருவிக்கும் உன்னத மரங்கள் என நம்பினர்.

இலங்கையில் கிறிஸ்துமஸ்

கிபி 6வது நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் கொஸ்மாஸ் இண்டிகொப்லெய்ட்ஸ் எழுதிய “Topographia Christiana” என்ற நூலில் அக்காலப் பகுதியில் தப்ரபேனில் கிறிஸ்தவர்கள் வசித்ததாகவும் அவர்களுக்கு ஒரு தேவாலாயம் இருந்ததாகவும், ஒரு பாதிரியார் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் அனுராதபுர இராச்சியத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாக, 1913 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் நடைப்பெற்ற  அகழ்வாராய்சிகளில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலுவைகளாலும் வவுனியாவுக்கு அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட திருமுழுக்குத் தொட்டியின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பண்டுகாபய மன்னர் புதிய நகரைக் கட்டுவிக்கும் போது தேவாலயம் ஒன்றை கட்டி கொடுத்ததாக மகாவம்சம் கூறும் யோணா பிரிவினர் நெஸ்டோரியன் கிரேக்க மரபுவழி கிறிஸ்தவர்கள் எனக் கருத்தப்படுகிறார்கள். அக்காலத்தில் இங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்களா என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இலங்கையில் வரலாற்றில் எழுத்தப்பட்ட முதலாவது கிறிஸ்துமஸ் பண்டிகை 1505 இல் இலங்கைக்கு கத்தோலிக்கர்களான போர்த்துக்கேயர் வருகையை அடுத்தே நடைபெற்றது. 1505 நவம்பர் 15 இல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்த லோரோன்சோ டி அல்மேதா தலைமையிலான போர்த்துக்கேய மாலுமிக் குழுவினர் அங்கு தமது கப்பலை பழுதுபார்க்கும் பணிகளிலும் கோட்டே அரசனுடன் தொடர்புகளையும் மேற்கொண்ட அதே வேலை கொழும்புத் துறைமுகத்தில் சிறிய தேவாலயம் ஒன்றை கட்டினார்கள். இத்தேவாலயத்தில் 1505 முதலாவதாக கிறிஸ்துமஸ் திவ்விய பலியை ஒப்புக் கொடுத்தார்கள். இலங்கையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முக்கிய இடம் பெறுகின்றது. கிறிஸ்தவர்கள் சமய நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் அதே வேலை ஏனைய சமயத்தவர்களும் சமய சார்பற்ற விடுமுறையாக கொண்டாடுகின்றனர்.

பல தொழில் நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் விடப்படுவதோடு பல விழாக்களும் எடுக்ப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் இலங்கையில் பொது விடுமுறை நாளாகும். டிசம்பர் மாததில் ஆரம்பம் முதலே வானொலி தொலைக்காட்சி போன்றவற்றில் கிறிஸ்துமஸ் சிந்தனைகள் கெரொல் இசைகள் என்பன ஒலி ஒளி பரப்பப்படும். விற்பனை
நிலையங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களையும் காணலாம். கிறிஸ்துமஸ் நாளுக்கு ஒரு கிழமைக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அலங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்;டாட்டங்களை கிறிஸ்தவர்கள் ஆரப்பிப்பது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் நாளன்று புத்தாடை அணியும் வழக்கமும் காணப்படுகிறது.

கத்தோலிக்கர் இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை பொது இடங்களிலும் வீடுகளிலும் காட்சிக்கு வைப்பது வழக்கமாகும். கத்தோலிக்கரும் அங்கிலிக்கன் சபையினரும் டிசம்பர் 24 நடு இரவு, டிசம்பர் 25 காலை திருப்பலிகளில் பங்குகொள்ளும் அதே வேளை சீர்த்திருத்த சபையினர் முழு இரவு தியானங்கள், செபக்கூட்டங்கள் என்பற்றில் ஈடுபடுவது வழக்கமாகும். டிசம்பர் 25 காலையில் அயலவருடன் உணவுகளை பகிர்தலும், விருந்து கொடுத்தலும் பொதுவான வழக்கமாகும்.