மறுசீரமைப்பு சபையினால் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படவர்கள் விவரம்

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் பிரதித் தலைவராக அமைச்சர் சஜீத் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளார். உப தலைவராக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கட்சியின் பொதுச்செயலாளராக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். தவிசாளராக அமைச்சர் கபீர் ஹசீம் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய அமைப்பாளராக நவீன் திசாநாயக்க தெரிவாகியுள்ளார்.

கட்சியின் ஏனைய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் விவரம் நாளைய தினம் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக, மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை அலரிமாளிகையில் இன்று மாலை கூடியபோது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூடிய குழுவின் இறுதி தீர்மானம் நாளை காலை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பிலான மற்றுமொரு கலந்துரையாடல் இன்று முற்பகல் அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியின் சகல பதவிகளும் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என அதன் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் யோசனை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]