மறிச்சுக்கட்டி முஸ்லிம்களுக்கு விடிவாக ஜனாதிபதியின் பதில் அமைய வேண்டும் : காதர் மஸ்தான்

மறிச்சுக்கட்டி முஸ்லிம்களுக்கு விடிவாக ஜனாதிபதியின் பதில் அமைய வேண்டும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ள பேசி தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

நில மீட்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மறிச்சுக்கட்டி மக்களை சந்தித்து அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் றிசாத் பதியுதீனோடு இணைந்துப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானும் பணித்திருந்தார்.

இதனையடுத்து மஸ்தான் எம்.பியினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ள அறிக்கையில்,
சிறுபாண்மை மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளாலும் உருவாக்கப்பட்ட நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாதியோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைப்பவரோ அல்ல. மாறாக இந்த வில்பத்து விவகாரத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதிக்குத் தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கின்றமையே உண்மை.

மறிச்சுக்கட்டி

குறித்த விடையத்தில் ஜனாதிபதி அரசியல்வாதிகளுக்கு முதல் சம்பவம் தொடர்பில் அங்குள்ள சிவில் சமூக அமைப்புக்களையே சந்திக்க விரும்பினார். அதனடிப்படையில் அண்மையில் அனைத்து முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் சார்பிலும் சிலர் ஜனாதிபதியை சந்தித்ததன் விளைவாக எதிர்வரும் 13ஆம் திகதி சாதகமான பதிலொன்றை தருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அப்போராட்டத்தை கைவிடுமாறும் கூறியிருந்தார்.

அதனடிப்படையில் எதிர்வரக்கூடிய 13ஆம் திகதி மறிச்சுக்கட்டி மக்களின் விடியலுக்கான நாளாக இருக்க வேண்டும் என்பதுடன், மீண்டும் தமது சொந்த நிலத்தில் அந்த மக்கள் சுதந்திரமாக வாழ ஜனாதிபதி வழிசமைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் எனக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]