மறந்தும் கூட இங்கு எல்லாம் காலணிகளுடன் செல்லாதீர்கள் – துரதிஷ்டமாம்!

அன்று காலணிகளை யாரும் வீட்டிற்குள் அணிந்து செல்ல மாட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் அவ்வாறு இல்லை. கோவிலை தவிர அனைத்து இடங்களுக்கும் காலணிகலுடன் செல்வது வழக்கமாகி விட்டது.

ஆனால் சில இடங்களிற்கு காலணிகளுடன் சென்றால் உங்கள் வாழ்க்கையில் பல துன்பங்களை ஏற்படுத்தும். இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

  • நமது வீட்டின் அனைத்து செல்வங்களுக்கும் காவலாக இருப்பது லட்சுமி தேவிதான். எனவே பணம் இருக்கும் இடமான லாக்கருக்கு செல்லும்போது நிச்சயமாக காலணி அணிந்து செல்லக்கூடாது. இது லட்சுமி தேவியை அவமதிக்கும் செயலாகும். இதனால் உங்கள் வாழ்வில் பணக்கஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • நாம் கண்டிப்பாக காலணி அணிந்து செல்லக்கூடாத மற்றொரு இடம் சமையலறை ஆகும். ஏனெனில் உணவு என்பது கடவுளின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. எனவே அந்த இடத்திற்கு நாம் நிச்சயம் மரியாதை கொடுக்க வேண்டும்.
  • நாம் உணவுப்பொருள்களை சேமித்து வைக்கும் இடத்திற்கு செல்லும் முன்னரும் காலணியை அகற்ற வேண்டியது அவசியமாகும். இது நமது உணவிற்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆகும்.
  • காலணிகள் பெரும்பாலும் தோலால் செய்யப்படுபவை ஆகும் எனவே அதனை கோவிலுக்குள் அணிந்து செல்லக்கூடாது, அதுமட்டுமின்றி தூய்மையான இடமான கோவிலுக்குள் எந்த அசுத்த பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது.
  • புனித ஆறுகளில் காலை நனைக்கும் முன் காலணிகளை கழட்ட வேண்டியது அவசியமாகும். இது கடவுளை மதிப்பதாகும். புனித இடங்களில் ஏன் காலணிகளுடன் செல்லக்கூடாது என்பதற்கான காரணங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.
  • கடவுள் இருக்கும் இடமென நாம் நினைத்து செல்லும் இடங்களுக்குள் காலணி அணிந்து செல்லக்கூடாது ஏனெனில் அங்கு நாம் விலைமதிப்பற்ற சிலவற்றை பெறப்போகிறோம். அந்த இடங்களில் அசுத்தமான எதையும் கொண்டு செல்லக்கூடாது. மேலும் காலணிகள் மூலம் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் பரவ வாய்ப்புள்ளது.
  • ஒரு புனிதமான இடத்திற்குள் நுழையும்போது நாம் அழைத்து செல்லும் அனைத்தையும் வெளியே விட்டுவிட வேண்டும், அதற்கு அடையாளமாக காலணிகளை கழட்ட வேண்டும். நமது காலணிகளை கழட்டும்போது அது நம்முடைய கர்வத்தையும், ஈகோவையும் அழித்து நம்மை ஒரு புதுமனிதனாக அழைத்துசெல்லும்.
  • தியானம் செய்யும்போது நாம் இந்த உலகின் அனைத்து பிடித்தங்களில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். காலணி என்பது நமது அந்தஸ்தின் அடையாளமாக இருக்கிறது. எனவே காலணிகளை தியானத்தின் போது கழட்ட வேண்டியது அவசியம்.
  • ஒருவர் அணிந்திருக்கும் காலணியின் தரத்தை கொண்டு அவர்களை எடைபோடும் மோசமான பழக்கம் நம் அனைவருக்கும் உள்ளது. கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே கோவில்களுக்குள் செல்லும்போது காலணிகளை கழட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது.
  • வேதங்களின் படி ஒருவர் எப்பொழுதும் எந்த அறைக்குள்ளும் காலணிகளுடன் செல்லக்கூடாது, அதேபோல மற்றவர்கள் இல்லத்திற்கு செல்லும்போது காலணியுடன் நுழையக்கூடாது அவ்வாறு நுழைந்தால் அந்த நொடி முதல் உங்களை துரதிர்ஷ்டம் துரத்த ஆரம்பித்து விடும் என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]