மர்மங்கள் நிறைந்த ஸ்ரீதேவியின் மரணம் கொலையா? தற்கொலையா?

பிரபலங்களின் மரணங்கள் மர்மமானதாகவும் சந்தேகத்துக்குரியதாகவும் அமைந்துவிடுவது இயல்பானதாக மாறிவிட்டது, அமெரிக்க பிரபலங்கள் முதல் ஜெயலலிதா, ஸ்ரீதேவி வரை மர்ம மரணங்கள தொடர்கின்றன.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவியின் மரணம்  பற்றிய செய்திகளை போதுமான  அளவில் இணையத்திலும் ஊடகங்களிளும் அலசி ஆராய்ந்து பிரித்து மேய்ந்தாகிவிட்டது, இருந்தாலும் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல அது கொலையாகத்தான் இருக்க வேண்டுமென பல்வேறுபட்ட கருத்துக்கள் இணையத்தளங்கள்வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இம்மரணம் தொடர்பான முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலங்கள் மற்றும் தகவல்கள் என்பன இம்மரணத்தின் மீதான சந்தேகத்தை அதிகரித்த வண்ணம் உள்ளது.

பிப்ரவரி  20ம் திகதி துபாயில் நடைபெற்ற திருமணத்திற்கு ஸ்ரீதேவி,மகள் குஷி, கணவர் போனிகபூர் ஆகியோர் பங்கு பற்றியதாக தெரிவிக்கபட்டாலும், பல சந்தேகங்களை எழுப்புகிறது.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

*அந்த திருமண வைபவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதுமணத்தம்பதிகள், ஸ்ரீதேவி, போனிகபூர், குஷி, மற்றும் ஸ்ரீதேவியின் சித்தி மகளும் நடிகையுமான மகேஸ்வரியும் காணப்படுகிறார், ஆனால் இதுவரை நடிகை மகேஸ்வரியோ, ஸ்ரீதேவியின் உறவினர்களோ ஊடகங்களுக்கு எந்த ஒரு இறங்கள் செய்தியோ தகவலோ வழங்கவில்லை  – ஏன்?

தனது சகோதரியின் மறைவு குறித்து அனுதாப  செய்தியையோ, கருத்துக்களையோ வழங்க மறந்துவிட்டாரா?

அல்லது தடுக்கப்பட்டாரா?

*நடிகை ஸ்ரீதேவியின் மரணசெய்தி ஊடகங்களுக்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டு சில மணிநேரங்களிலேயே, ஸ்ரீதேவியின் பெறாமகனும், போனிகபூரின் முதல் தாரத்தின் மகனும் தென்னிந்திய நடிகருமான அர்ஜுன்கபூர் அவசரமாக மும்பை வந்ததின் நோக்கம்என்ன?

ஸ்ரீதேவியின் இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்வதற்கு அர்ஜுன்கபூர் அவசரமாக மும்பை வந்ததாக போனிகபூர் தெரிவித்தாலும், போனிகபூர் போன்ற பிரபலங்களின் வீட்டு வைபவங்களை நடாத்தி தருவதற்கென்றே செயல்படும் நிறுவனங்கள், ஒரு தொலைபேசி அழைப்பிலேயே சகல ஏற்பாடுகளையும் செய்துவிடும் எனில், அர்ஜுன்கபூர் தானே வந்து ஏற்பாடுகளை செய்வதற்கான அவசியம் என்ன?

அதுவும் தனது தந்தையான போனிகபூரை துபாயில் தனிமையில் விட்டுவிட்டு…

*துபாய் போலீசாரின் விசாரணைகள் முடிவடைந்து போனிகபூர் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதன் பின்னர், ஸ்ரீதேவியின் மரணசடங்குகளை ஏற்பாடு செய்வதற்காக அவசரமாக மும்பைவந்த அர்ஜுன்கபூர் மீண்டும் துபாய்க்கு செல்ல என்ன காரணம்?

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

*scene of crime – நடிகையின் மரணம் நிகழ்ந்த போது அர்ஜுன்கபூர்  துபாயில் இருந்திருந்தால், அவரிடமும் துபாய் போலீசார் தீவிர விசாரணை நடத்தி இருப்பார்கள், ஆனால் இங்கு அர்ஜுன்கபூரை போலீஸ் விசாரணையில் இருந்து மறைத்து வைத்த நாடகம் அரங்கேறியது.

மேலும் அர்ஜுன்கபூர் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியதும், நிருபர்கள் ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய தகவல் அறிய முற்பட்டபோது அவர் அலட்சியமாக தனது காரில் ஏறி நடிகர் அனில்கபூரின் வீட்டுக்கு செல்வதை ஊடகங்கள் படமாக்கி வெளியிட்டன

*மேலும் திருமணத்திற்கு பின் போனிகபூர் மற்றும் குஷிகபூர் இருவரும் இந்தியா திரும்பும் புகைப்படம் Times of India பத்திரிகையில் வெளியாகியுள்ளது, அதில் அர்ஜுன் கபூர் கூட வந்ததாக தகவல்கள் ஏதும் இல்லை, எனவே அர்ஜுன்கபூர் துபாயில் தங்கியிருப்பதற்கான 100% வாய்ப்பு உள்ளது.

* திருமணம் முடிந்து ஸ்ரீதேவியை துபாயில் தனிமையில் விட்டுவிட்டு போனிகபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் மும்பை வந்ததின் அவசியம் என்ன?

ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவுக்காரரும் நடிகையுமான மகேஸ்வரியை கூட ஸ்ரீதேவியின் துணைக்கு நிறுத்தாமல் ஸ்ரீதேவி Emirates Tower Hotel இல் தங்கவைக்கப்பட்டாரா? தனிமைபடுத்தப்பட்டாரா?

*ஒரு பிரபல திரை நட்சத்திரம் உதவியாளர் இன்றி மெய்ப்பாதுகாவலர்களன்றி தனிமையில் தங்கியது ஏன்?

*ஸ்ரீதேவி Emirates Tower Hotel இல்தங்கியிருந்த 2 ½  நாட்களில் அர்ஜுன்கபூர் எங்கே இருந்தார்?

*3 நாட்களுக்கு முன்பு ஸ்ரீதேவியுடன் ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்ட போனிகபூர் எந்த ஒரு விசேஷகாரணமும் இன்றி ஸ்ரீதேவிக்கு  surprise  தருவதற்கு எண்ணியது  – ஏன்  ?

*போனிகபூரின் திடீர் துபாய் விஜயம் ஸ்ரீதேவியை Surprise படுத்தவா? அல்லது வேவு பார்க்கவா ?

*மாலை 5.30  அளவில் ஸ்ரீதேவியின் அறையை சென்றடைந்த போனிகபூர் அங்கே கண்டது என்ன?

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

*போனிகபூரும் ஸ்ரீதேவியும் உரையாடி கெண்ருந்தார்களா ? வாக்குவாதப்பட்டார்களா?

*Gulf News இன் கூற்றுப்படி ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் குப்புற விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.

*குளியல் தொட்டியில் நீர்நிரப்பி யாரும்,  நீச்சல் குளத்தில் குதிப்பதை போல தலைகுப்புற பெய்யவில்லை.

*ஸ்ரீதேவியின் குருதியில் மதுசாரம் கலந்து இருந்ததாக கூறப்பட்டது.  சம்பவத்தன்று ஸ்ரீதேவி மதுபோதையில் இருந்திருந்தால், அவரை இரவு உணவருந்த வெளியே போனிகபூர் அழைத்திருக்கமாட்டார்.

  • ஸ்ரீதேவி மது அருந்தியிருந்தால், போனி கபூர் இரவு உணவருந்த அவரை அழைத்திருக்க மாட்டார்,

போனிகபூரின் வாக்குமூலம் பொய்யானது.

  • ஸ்ரீதேவி தெளிந்த சிந்தையில் இருந்திருந்தால் வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது, ஆனால் குளியல் தொட்டியில்மூழ்கி இறந்திருக்க வாய்ப்பு இல்லை.

*எது எவ்வாறாயினும் சராசரியாக 6 அடி உயரமும் 62KG எடையுள்ள ஒருவர் நிலை தடுமாறி தண்ணீரிலோ, தரையிலோ விழும் சத்தம் வெளியே கேட்காமல் இருக்கவாய்பில்லை.

* மேலும் சம்பவம் நடந்தவுடன் ஓட்டல் வைத்தியரை நாடாடது ஏன் ?

* ஓட்டல் நிர்வாகத்திற்கு அறிவிக்காமல் தனது நண்பரை அழைத்தது ஏன் ?

* மரணம் நிகழ்ந்து 3-4 மணித்தியாலங்களின் பின்னர் போலீசுக்கு தகவல் தந்தது ஏன்?

* இவை அனைத்தும் நிகழும் போது அர்ஜுன்கபூர் இருந்தது எங்கே?

நடந்த அனைத்து சம்பவங்களையும் ஒரு நேர்கோட்டில் அடுக்கிபார்த்தால், ஒரு நேர்த்தியான திரைக்கதை தெரிகிறது…இந்த திரைக்கதையை எழுதியது யார்? இத்திரைக் கதையின் நாயகன் யார்??? வில்லன் யார் ???

பத்தவச்சுட்டியே பரட்ட…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]