மர்மக் காய்ச்சல் தொடர்பில் ராஜிதவுக்கு டக்ளஸ் கடிதம்

மர்மக் காய்ச்சல் தொடர்பில் ராஜிதவுக்கு டக்ளஸ் கடிதம்

முல்லைத்தீவு நகரப் பகுதியில் பரவி வருகின்ற ஒருவகை காய்ச்சல் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த காய்ச்சல் கடந்த மூன்று வார காலப் பகுதியில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில், மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆய்வுகள் குறித்து உடனடி நடவடிக்கைகளையும், மேலும் இந் நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் உடன் எடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.

“வடக்கில் டெங்கு நோயாளர்களது அதிகரிப்பு தொடர்பிலும், மலேரியா நோய் பரப்புகின்ற நுளம்புகளின் பெருக்கம் தொடர்பிலும் ஏற்கனவே சுகாதார அமைச்சின் அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது மேற்படி மர்மக் காய்ச்சல் முல்லைத்தீவு மாட்டத்தில் ஒன்பது உயிர்களை பலியெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. ” என்று ட்களஸ் குறிப்பிட்டுள்ளார்.

“அத்துடன், சுமார் மூன்று காலப் பகுதிக்குள் 9 பேர் உயிரிழந்தமையானது மிகவும் பாரதூரமான நிலைமையாகவே காணப்படுகின்றது. எனவே, இவ் விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது” என்றம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘உள்ளூராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் இன்மையும், மாகாண சபையின் வினைத்திறன் இன்மையும் காரணமாக வடக்கு மாகாணத்தில் பல்வேறு நோய்கள் பரவுகின்ற நிலைமையினையே காணக்கூடியதாக இருக்கின்ற சூழலில், வடக்கின் சுகாதார நிலைமை குறித்து மத்திய அரசும் அதிக அவதானமெடுக்க வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]