மர்மக் காய்ச்சலால் யாழில் சிறுவன் பலி

மர்மக் காய்ச்சலால் யாழில் சிறுவன் பலி

ஒருவித காய்ச்சல் காரணமாக 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடுப்பிடி பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் 23ஆம் திகதி மாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, பின்னர், யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேரும் யாழில் 11 பேரும் அடையாளம் காணப்படாத ஒருவகை காய்ச்சலால் கடந்த மூன்று மாதங்களில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]