முகப்பு News Local News மரை இறைச்சியுடன் கைதானவருக்கு அபராதம்

மரை இறைச்சியுடன் கைதானவருக்கு அபராதம்

நுவரெலியா பொரலந்த பகுதியில் 150 கிலோகிராம் மரை இறைச்சியுடன் கைதுசெய்யப்பட்ட நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதிமன்ற நீதவான் ருவான் இந்திக்க டீ சில்வா, இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.

நுவரெலியா பொரலந்த பீட்ரூ பகுதியைச் சேர்ந்த சுப்பையா கணேஷ் (46 வயது) என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மரை இறைச்சி விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் மரை இறைச்சியை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com