மருமகன் கறுப்பாக இருந்ததால் 8 மாத கர்ப்பிணி மகளை தீவைத்து கொன்றேன் : அதிர்ச்சி சம்பவம்!!

திருச்சி மாவட்டத்தில் தனக்கு தெரியாமல் மகள் திருமணம் செய்துகொண்டதோடு மட்டுமல்லாமல் கர்ப்பமானதால் கோபம் கொண்ட தந்தை பெட்ரோல் ஊற்றி மகள் மற்றும் மனைவியை எரித்துள்ளார்.

பேக்கரி நடத்திவரும் சேகர்- மல்லிகா தம்பதியினருக்கு சுவாதி என்ற மகள் உள்ளார். திருச்சியில் சிறப்பு காவல் படை பொலிசில் பணியாற்றும் தங்கவேல் என்பவர் பேக்கரிக்கு அடிக்கடி வந்துபோனதன் மூலம் சுவாதிக்கும், தங்கவேலுக்கும் காதல் மலர்ந்துள்ளது,

செப்டம்பர் மாதம் 22 ம் திகதி வீட்டிற்கு தெரியாமல் முறைப்படி பதிவு திருமணம் செய்திருக்கிறார்கள்.
திருமணம் ஆனாலும் தன் தாயின் வீட்டிலே இருந்தாலும் அடிக்கடி காதல் திருமணம் செய்த கணவரை பார்க்க அடிக்கடி வெளியே சென்றுள்ளார் சுவாதி. இதன் விளைவு 8 மாத நிறைமாத கர்ப்பிணியானார்.

நடந்தவை அனைத்தையும் தனது தாயிடம் சொல்லி, எப்படியாவது தந்தையிடம் சம்மதம் வாங்கி தருமாறு சுவாதி கேட்டுள்ளார்

ஆனால், தனது கணவனிடம் சொல்வதற்கு மல்லியாக அஞ்சியுள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரம் தந்தைக்கு தெரிந்ததால், வீட்டில் பெரிய பிரச்சனையே வெடித்தது. இதனையடுத்து கொஞ்சநாள் பொறுமையாக இருங்கள் என கூறியுள்ளார் தந்தை.

இதற்கிடையில், வீட்டில் பிரச்சனையை பேசி விட்டேன். விரைவில் என்னுடைய பெண்ணை உங்க வீட்டிற்கு அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி சுவாதியின் தாய், தன் மருமகன் வீட்டிற்கு சென்று சொல்லிவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்.

இவ்வளவு பிரச்சனைகள் நடந்திருக்க, தனக்கு தெரியாமல் மருமகனை பார்க்க சென்ற மனைவி மீது அதிக கோபம் கொண்ட சேகர், இருவரையும் தீ வைத்து கொளுத்திவிட தீர்மானித்துள்ளார்.

ஏற்கனவே பெட்ரோல் வாங்கி பேக்கரி முழுவதும் ஊற்றி லைட்டரை ரெடியாக கையில் வைத்துக்கொண்டார். வழக்கம் போல் தாய், மகள் இருவரும் கடைக்கு வந்திருக்கிறார்கள்.

அப்போது, லைட்டரை பற்ற வைத்ததில் இவர்கள் இருவர் மீதும் தீப்பிடித்து எரிந்துள்ளது, இவர்களை காப்பாற்றுவது போல சேகர் நாடகமாடியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் படுகாயமடைந்த சுவாதி, மல்லிகா இருவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

தீயணைப்புத்துறையினர் கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். சேகருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி மல்லிகா இறந்துபோனார், 8 மாத கர்ப்பிணியான மகள் சுவாதி உயிருக்கு போராடி வருகிறார்.

கைதான சேகர், நேற்று மாலை திருச்சி 5-வது ஜூடிசியல் நீதிபதி வீட்டில் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தனது மருமகன் கருப்பு நிறத்தில் இருந்ததால் அவனை எனக்கு பிடிக்கவில்லை, இதனால் மகளையும், மனைவியையும் தீவைத்து எரித்தேன் என சேகர் பொலிசாரிடம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]