மருந்து மாத்திரை எதுவும் இன்றி ஐந்தே நிமிடத்தில் தலைவலியை போக்க இதை மட்டும் செய்தாலே போதும்!..

இன்று நம்மில் அதிகமானவர்கள் அடிக்கடி தலை வலியால் அவதிப்படுகின்றார்கள். அதற்கு காரணம் வேலைப்பளு, மன அழுத்தம், காலநிலை மாற்றம் போன்றவையாகும்.

தலைவலிக்கு வலிநிவாரணி மாத்திரைகளையே அதிகம் பயன்படுத்துகின்றோம். இதனால் பக்க விளைவுகளே அதிகம்.
ஆனால் நம்முன்னோர்கள் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் தலைவலியை போக்க சில முறைகளை பின்பற்றியுள்ளனர். இதன் மூலம் அடிக்கடி தலைவலி வருவதையும் தடுக்கலாம்.

நமது மூக்கில் உள்ள இரண்டு துவாரங்கள் உள்ளன. ஒன்று வலது துவாரம் மற்றையது இடது துவாரம். இதில் வலது சூரியனையும் இடது சந்திரனையும் குறிக்கும்.

தலைவலி ஏற்படும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்க வேண்டும். இவ்வாறு செய்கையில் ஐந்தே நிமிடத்தில் தலைவலி பறந்து போய் விடும். இது போன்று நாம் களைப்பாக இருக்கும் போதும் செய்யலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]