மருந்து எனக்கூறி தேயிலை அறிமுகப்படுத்தியவருக்கு தண்டம்

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி, நோய்களுக்கு சிறந்த மருந்து எனக்கூறி, தேயிலை வகையொன்றை விளம்பரம் செய்த நிறுவனமொன்றின் பிரதிநிதிக்கு இன்று (16) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை நீதவான் நீதிமன்ற நீதவான், குறித்த நபருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்ததுடன், ஆறாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனமொன்றின் பிரதிநிதி, உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சிறந்த ரக தேயிலையை விற்பனை செய்வதற்காக பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக குறித்த வகை தேயிலையைப் பயன்படுத்த முடியும் என்று விளம்பரங்களை பிரசுரித்துள்ளார்.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெறாமலேயே விளம்பரம் வெளியிடப்பட்டிருந்ததாக படல்கும்பரை பொது சுகாதார பரிசோதகர், மொனராகலை நீதிமன்றத்தில், வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]