மருத்துவ பிரிவின் மோசடிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

மருத்துவ விநியோகப் பிரிவில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி சம்பந்தமான விசாரணைகள் பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2010 மற்றும் 2015ம் ஆண்டு காலப்பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் மருந்துகளை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றுள்ள நிதி மோசடி சம்பந்தமாகவே விசாரிக்கப்படவுள்ளது என்று ஆணைக்குழு கூறியுள்ளது.

சரியான செயல்முறையை மீறி குறித்த காலப்பகுதியில் 8700 வகையான மருந்து வகைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் அரசாங்கத்திற்கு 12 கோடி 90 இலட்சத்திற்கும் அதிக அளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி குறித்த விசாரணைக்காக மருத்துவ விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் அந்த தனியார் ஔடத நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் உள்ளிட்ட 12 பேர் இன்றைய தினம் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]