மருத்துவ கற்கைகளுக்கு ஆகக்குறைந்த தகமை: அமைச்சரவை அங்கீகாரம்

மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை அரசாங்கம் தயாரித்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும் காணியமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் நிலையத்தில்  இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.

இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமாதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த கற்கைநெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் ஆகிய பாடவிதானங்களில் ஆகக் குறைந்தது C சித்திகள் இரண்டினையும் S ஒன்றினையும் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன், இவற்றை ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஆகக் குறைந்த தகைமைகள் என்பதைஅமைச்சரவை அங்கீகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]