மருத்துவ கழிவு என ஒதுக்கப்பட்ட 14 வார சிசு – புகைப்படங்களை பகிர்ந்த தாய்!

மருத்துவ கழிவு என மருத்துவர்களால் ஒதுக்கப்பட்ட 14 வார குழந்தையின் புகைப்படத்தை தாய் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தின் ஃபேர் க்ரோவ் பகுதியில் வசிப்பவர்கள் ஷெரென் மற்றும் மைக்கேல் தம்பதி. திருமணமாகி பல வருடங்களுக்கு பின் ஷெரென் கருத்தரித்தார். இவரின் 14வது மருத்துவ பரிசோதனையில் சிசுவின் இதயம் துடிக்கவில்லை எனவும், மருத்துவத்தை பொறுத்தமட்டில் இது வெறும் கழிவு எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் 20 வாரம் கடந்த கருவையே மருத்துவ ரீதியாக குழந்தை என கருதுவார்கள்.

மருத்துவ கழிவானாலும் தமக்கு இது குழந்தை எனவும் இதுநாள் வரையான வாழ்க்கையின் கனவும் எதிர்பார்ப்பும் என கூறிய ஷெரென், கருவை கலைக்காமல் பிரசவிக்கவே முடிவு செய்துள்ளார்.

இறந்து பிறந்த அந்த சிசுவிற்கு மிரான் எனவும் பெயர் வைத்துள்ளனர். குழந்தை இறந்து பிறந்தாலும் கடவுள் தமக்கு பிரசவிக்கும் வாய்ப்பை தந்தமைக்கு நன்றி எனக் கூறும் அவர், குறித்த சிசுவை தங்கள் வீட்டிற்கு எடுத்துவந்து ஒருவார காலம் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்துள்ளனர்.

நான்கு அங்குலம் கொண்ட அந்த குழந்தை வெறும் 26 கிராம் எடையே இருந்தது. ஒருவார காலம் பாதுகாத்த பின்னர் தங்களது வீட்டில் உள்ள பூந்தொட்டியில் குறித்த சிசுவை புதைத்துள்ளனர்.

அக்குழந்தையின் கால்கள் மற்றும் கைகளின் புகைப்படங்களை பதிவு செய்த ஷெரென், தமது தாளாத துக்கத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]