மருத்துவ  உதவியாளர்களின் தொழிற்சங்க ஒன்றியத்தின் பணி நிறுத்த போராட்டம் இன்று கைவிடல்

மருத்துவ  உதவியாளர்களின்

 

 

 

 

 

 

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடாளாவிய ரீதியாக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த, மருத்துவ  உதவியாளர்களின் தொழிற்சங்க ஒன்றியத்தின் பணி நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சுகாhர அமைச்சர் ராஜித சேனாரத்தவுடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்க அமைச்சர் உறுதியளித்ததாக தொழிற்சங்க ஒன்றியத்தின் பிரதான செயலாளர் தர்மசிறி யாப்பா தெரிவித்தார்.